Home Entertainment Suriya 42: பரபரப்பு எச்சரிக்கை அறிக்கை வெளியிட்ட சூரியா 42 தயாரிப்பு நிறுவனம்

Suriya 42: பரபரப்பு எச்சரிக்கை அறிக்கை வெளியிட்ட சூரியா 42 தயாரிப்பு நிறுவனம்

79
0

Suriya 42: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூரியா திஷாபதானி இணைந்து நடிக்கும் சூர்யா42 படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது, இந்நிலையில் சில படங்கள் செட்டில் இருந்து கசிந்து வருகின்றன. இதனால் அதிருப்தி அடைந்த தயாரிப்பாளர்கள் தற்போது ஒரு அறிக்கையைப் பகிர்ந்துள்ளதோடு, படத்தில் இருந்து கசிந்த உள்ளடக்கத்தைப் பகிர்பவர்களை எச்சரித்துள்ளனர். சூரியாவின் 42 படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ட்விட்டரில் ஒரு எச்சரிக்கை செய்தியை பகிர்ந்துள்ளனர்.

அறிக்கை:
சூரியா42 பற்றிய எந்தவித ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிர வேண்டாம். சூரியா 42 படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்படும் சில ‘வீடியோக்கள் மற்றும் படங்களை’ பகிர்வதை நாங்கள் கவனித்துள்ளோம். சூர்யா42 படத்தில் ஒட்டுமொத்த குழுவின் ரத்தமும் வியர்வையும் கலந்திருக்கிறது. இந்த படத்தை அனைவருக்கும் மிக பிரம்மாண்டமான திரையரங்க அனுபவமாக வழங்க நாங்கள் விரும்புகிறோம்.

ALSO READ  Amala Paul: அழகான படங்களுடன் கர்ப்பத்தை அறிவித்த அமலா பால்

Also Read: சந்திரமுகி 2 OTT ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்ற பிரபல டிஜிட்டல் இயங்குதளம்

வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ நீங்கள் அகற்றினால் (delete/remove) அது எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும், மேலும் எதிர்காலத்தில் இதைப் பகிர வேண்டாம் என்று பணிவுடன் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மீறினால் ‘பதிப்புரிமை மீறல்’ கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.

ALSO READ  Ajithkumar: முதல்முறையாக சமூக ஊடகத்தில் நுழைந்த அஜித் மனைவி ஷாலனி

Suriya 42: பரபரப்பு எச்சரிக்கை அறிக்கை வெளியிட்ட சூரியா 42 தயாரிப்பு நிறுவனம்

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா 42 படத்தை UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் ஆகியவற்றின் கீழ் வம்சி கிருஷ்ணா, பிரமோத் மற்றும் KE ஞானவேல்ராஜா ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா ஆகியோர் நடித்துள்ளனர். செப்டம்பர் 9 ஆம் தேதி மோஷன் போஸ்டருடன் அறிவிக்கபட்ட இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

Leave a Reply