Simbu: வெந்து தணித்தது காடு திறப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடந்தது. விழாவிற்கு நான் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதாக கூறினார்கள், இங்கே உள்ள வீட்டில் இருந்து பல்லாவரம் வருவதற்கு எதற்கு என்று நான் ஹெலிகாப்டரில் வரவில்லை என சிம்பு மேடாயில் அதற்க்கு மறுப்பு தெரிவித்தார்.
Also Read: ரசிகர்கள் சார்பாக கமல் கேள்விக்கு கௌதம் மேனன் பதில் – உற்சாகத்தில் ரசிகர்கள்
அந்த விழாவில் அதிகம் பேசவில்லை, ‘படம் பண்றது தான் நம்ம வேலை. எப்படி இருக்கு என படத்தை பார்த்துவிட்டு சொல்வது ரசிகர்களின் வேலை’ என கூறினார். மேடையில் சிம்புவுக்கு திருமானம் செய்ய குடும்பத்தினர் பெண் பார்ப்பதாக வந்த செய்தி பற்றி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினர்.
அதற்க்கு பதில் சொன்ன சிம்பு. “சும்மா நாம் யாரையும் கல்யாணம் செய்ய முடியாது. ரெண்டு பேர் ஒன்றாக இருந்தால் நாம் அதுக்கு மரியாதே கொடுக்கணும் என்றார். பேத்தவங்களுக்கு ஒரு வேண்டுகோள், பசங்களை சும்மா ‘கல்யாணம்.. கல்யாணம்’ என டார்ச்சர் பண்ணாதீங்க. ப்ரெஷர் காரணமாக சில தவறான கல்யாணம் நடக்கிறது, பசங்க முதலில் வாழட்டும் வாழ்க்கையை, யார் கரெக்ட்டா இருப்பாங்கனு பாக்கட்டும், ஆகையும் மீறி மேலே ஒருவன் இருக்கிறார், அவரா பாத்து ஒன்னு அனுப்புவார். அதுவரை சைலண்டாக வெயிட் பண்றது தான் நல்லது” என சிம்பு கூறி இருக்கிறார்.