Simbu: நல்ல கதை மற்றும் திரைக்கதை இருந்தால் போதும். ரஜினி, அஜித், விஜய் படங்களுக்கு இணையான வசூலை சாதனை செயமுடியும் என்ற நிலைக்கு தற்போது தமிழ் சினிமா வளர்ந்துவிட்டது..
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த நவம்பர் 25 ஆம் தேதி மாநாடு திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. மாநாடு திரைப்படம் எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள் ரசிகர்கள் உண்டு. சிலர் மாநாடு திரைப்படம் இனி வராது என்று கணக்கு போட்டவர்களும் உண்டு. தற்போது மாநாடு திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போடுகிறது என்பது கூறிப்பிடத்தக்கது.
மாநாடு திரைபட அறிவிப்பை கடந்த 2018 ஜூலை மாதம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டார். துவங்கிய அன்று முதல், படம் வெளியாகும் அன்று வரை நடந்த சம்பவங்கள் அனைத்தும் நாம் அனைவருக்கும் தெரியும். மாநாடு படத்திற்காக அவ்வளவு சலசலப்புகள் மற்றும் பிரச்சனைகள். இதற்கிடையில் ஒருவழியாக கடந்த நவம்பர் 25 ஆம் தேதி மாநாடு திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.
இப்படத்தில் சிம்புவுடன் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியதர்ஷன், கல்யாணி பிரேம்ஜி, எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருந்தனர். டைம் லூப்பை மய்யமாக வெத்து எடுக்கப்பட்ட திரைப்படம் மாநாடு. ஹாலிவுட் படத்தில் வரும் கதைக்களத்தை எளிதில் ரசிகர்களுக்கும் புரியும்படியும் மற்றும் ரசிக்கும்படியும் எடுத்திருந்தார் இயக்குனர் வெங்கட்பிரபு. மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இதுதான்.
எஸ்.ஜே.சூர்யாவின் மிரட்டலான நடிப்புக்கு இணையாக சிம்புவின் எதார்த்த நடிப்பு முக்கிய காரணம். யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு மிக கூடுதல் பலம் சேர்த்தது. சிம்பு கடந்த பத்து ஆண்டுகளாக ஒரு வெற்றிப் படத்திற்காக காத்திருந்த சிம்புவிற்கும் வெங்கட் பிரபு மாநாடு படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது என்பது குறிப்பிடதக்கது.
தற்போது மாநாடு திரைப்படம் 25 நாட்களை கடந்து வெற்றி படமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம் வசூல் சாதனை படித்துள்ளது சிம்புவுக்கு. தற்போது மாநாடு திரைப்படம் நூறு கோடியை வசூலை எட்டியுள்ளது. ரஜினி, அஜித், விஜய் படங்கள்தான் நூறுகோடி தாண்டி வசூல் சாதனை செய்யும் என்ற கணிப்பு முறியடித்தது மாநாடு திரைப்படம்.
நல்ல கதை மற்றும் திரைக்கதை இருந்தால் போதும். ரஜினி, அஜித், விஜய் படங்களுக்கு இணையான வசூலை சாதனை செயமுடியும் என்ற நிலைக்கு தற்போது தமிழ் சினிமா வளர்ந்துவிட்டது. தற்போது மாநாடு திரைப்படம் 100 கோடி வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.