Home Entertainment Suriya Birthday: சூர்யா பிறந்தநாள் முன்னிட்டு ‘வாடிவாசல்’ ஸ்பெஷல் வீடியோ வெளியிட திட்டம்

Suriya Birthday: சூர்யா பிறந்தநாள் முன்னிட்டு ‘வாடிவாசல்’ ஸ்பெஷல் வீடியோ வெளியிட திட்டம்

23
0

Suriya Birthday: கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகி வரும் வாடிவாசல் படத்தை ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தின் ஒத்திகை படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பிற்க்காக சூர்யா காளை மாடுகளுடன் சிறப்பு பயிற்சிகளும் எடுத்து வருகிறார். மேலும் தமிழகத்தில் இருந்து திருநெல்வேலி, மதுரை, காங்கேயம் போன்ற பகுதிகளில் இருந்து காளை மாடுகளும் வரவைக்கப்பட்டு சில நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது.

ALSO READ  Varisu: தளபதி விஜயின் வாரிசு படத்தின் சர்ப்ரைஸ் படம் வெளியானது

Suriya Birthday: சூர்யா பிறந்தநாள் முன்னிட்டு 'வாடிவாசல்' ஸ்பெஷல் வீடியோ வெளியிட திட்டம்

ஸ்பெஷல் வீடியோ

Also Read: Chiyaan Vikram: கோப்ரா படத்தின் பாடல்கள் லிஸ்ட் வெளியீடு

தற்போது சூர்யா வாடிவாசல் படத்திற்கு இடைவெளிவிட்டு, பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஜூலை 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநள் வருவதால், பிறந்தநள் முன்னிட்டு வாடிவாசல் படத்தில் இருந்து ஸ்பெஷல் வீடியோ காட்சி ஒன்றை உருவாக்கி வெற்றிமாறன் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது. இந்த வீடியோ வாடிவாசலுக்காக நடைபெற்ற ஒத்திகை படப்பிடிப்பு காட்சிகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் கூறப்படுகிறது.

Leave a Reply