Home Entertainment Rajinikanth: பணம், பேர், புகழ், எல்லாம் இருக்கு ஆனால் எனக்கு நிம்மதி இல்லை – ரஜினிகாந்த்...

Rajinikanth: பணம், பேர், புகழ், எல்லாம் இருக்கு ஆனால் எனக்கு நிம்மதி இல்லை – ரஜினிகாந்த் வருத்தம்

20
0

Rajinikanth: பணம், பேர், புகழ் என என் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன். ஆனால் 10 சதவீதம் கூட நிம்மதி கிடைக்கவில்லை. சென்னையில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் தன் வருத்தத்தை தெரிவித்தார். நுங்கம்பாக்கத்தில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா சார்பில் ஆன்மிக நிகழ்ச்சி நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் இதில் பங்கேற்றூ தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டார்.

Also Read: National Awards: ஐந்து தேசிய விருதுகளை வென்ற சூரரைப் போற்று – 68 வது தேசிய விருதுகள் அறிவிப்பு

அதன்பின்னர் விழாவில் பேசிய ரஜினிகாந்த். யோகா நிகழ்ச்சிக்கு இவ்வளவு மக்கள் வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் பெரிய நடிகர் என்று இங்கு சொன்னார்கள். ஆனால் இது திட்டா, பாராட்டா என எனக்கு தெரியவில்லை. நான் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் ‛‛ராகவேந்திரா, பாபா” படங்கள் மட்டும் தான்எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்தது. அவர்களை பற்றி இந்த படங்கள் வந்த பின்னர் தான் மக்கள் நிறைய தெரிந்து கொண்டனர். இமயமலைக்கு நிறைய பேர் சென்று வந்தார்கள். என் ரசிகர்கள் சிலர் சன்னியாசியாக மாறி உள்ளனர். ஆனால் நான் மட்டும் இன்னும் நடிகராக உள்ளேன்.

ALSO READ  AK: அஜித்குமார் லண்டனில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர்க்கு வருகை - வீடியோ வைரல்!

Rajinikanth: பணம், பேர், புகழ், எல்லாம் இருக்கு ஆனால் எனக்கு நிம்மதி இல்லை - ரஜினிகாந்த் வருத்தம்

இயற்கையாகவே அமைந்த சொர்க்கம் இமயமலை. அங்குள்ள சில மூலிகைகளை சாப்பிட்டால் புத்துணர்ச்சி இருக்கும். நாம் இந்த உலகத்தை விட்டு செல்லும்போது ஆசைக்கு அதிகமா சொத்து சேர்த்து வைத்து செல்வதை விட நம்ம நோயாளியாக இல்லாமல் செல்வது ரொம்ப முக்கியம். உடல் ஆரோக்கியம் முக்கியமானது. இல்லையென்றால் நாம் மருத்துவமனை செல்ல வேண்டும். நான் இரண்டு முறை மருத்துவமனை சென்று வந்தேன்.

ALSO READ  Kollywood: பிரபல மலையாள தயாரிப்பாளரை த்ரிஷா கிருஷ்ணன் திருமணம் செய்ய உள்ளாரா?

Also Read: Netflix: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வீடியோ வெளியீடு நெட்ஃபிக்ஸ் உறுதி

ஆசிரியர்கள் சொல்லும் நல்ல விஷயங்களை கேட்க வேண்டும். பெற்றோர்கள் நல்ல அறிவையும் வளர்க்க வேண்டும். நற்சிந்தனைக்கு புத்தகங்கள் படிக்க வேண்டும். வாழ்க்கையில் நாம் நிம்மதியாக இருக்க வேண்டும். நான் என் வாழ்வில் பணம், பேர், புகழ், அரசியல்வாதிகள் என எல்லா உச்சங்களையும் தொட்டுவிட்டேன். ஆனால் சித்தர்களிடம் உள்ள மகிழ்ச்சி, நிம்மதியில் எனக்கு 10 சதவீதம் கூட இதுவரை கிடைக்கவில்லை.

Leave a Reply