Home Entertainment PS1: பொன்னியின் செல்வன் படத்தில் இருக்கும் தவறை சுட்டிக்காட்டி தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம்

PS1: பொன்னியின் செல்வன் படத்தில் இருக்கும் தவறை சுட்டிக்காட்டி தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம்

47
0

PS 1: இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் பொன்னியின் செல்வன் திரைபடம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி உலகமுழுவதும் வெளியாகவுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள தவறை இலங்கை தமிழர் ஒருவர் சுட்டிக்காட்டிய நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: நவராத்திரி ஸ்பெசல் போட்டோஷூட்டில் இளவரசியாக அதிதி ஷங்கர் – வைரல் புகைப்படங்கள்

படக்குழுவினர் இந்தியாவில் உள்ள பலபகுதிகளில் படத்தை மிகப்பெரிய அளவில் புரொமோஷன் செய்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கி முன்பதிவில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்துள்ளது, அதோடு மிகப்பெரிய அளவில் படம் வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது.

ALSO READ  Ajith: மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்யும் அஜித் - டிரெண்ட் ஆகும் வீடியோ

PS1: பொன்னியின் செல்வன் படத்தில் இருக்கும் தவறை சுட்டிக்காட்டி தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம்

இந்த நிலையில் இலங்கை தமிழர் ஒருவர் பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள தவறை கண்டுபிடித்து தயாரிப்பு நிறுவனத்திற்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதாவது, பொன்னியின் செல்வன் படத்தில் ஹிந்தி டிரைலரில் சிங்கள நாடு என்று குறிப்பிட்டு இருக்கிறது, அதை ஶ்ரீலங்கா என்று மாற்றவேண்டும் என்று தெரிவித்துள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கு தான் மிகப்பெரிய ரசிகர் என்றும் தற்போது தான் பிரிட்டனில் இருப்பதாகவும், இந்த தவறை சரிசெய்ய கேட்டு கொள்வதாக தாழ்மையுடன் தெரிவித்தார். தமிழர்கள் வாழும் இலங்கை நாட்டை சிங்களர்களின் நாடு என்று குறிக்கும் வகையில் சிங்கள நாடு என்று இருப்பது தனக்கு மன வருத்தத்தை தருவதாக தெரிவித்திருக்கிறார் அந்த ரசிகர்.

Leave a Reply