Kamal Hassan: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாஸன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.
கமல்ஹாஸன் கதர் ஆடை தொடர்பான நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்று திரும்பிய பின் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் சென்னையிலுள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் கமல் தொகுத்து வழங்கிவந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசனுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணா தொகுத்து வழங்கினார்.
முதல்வர் ஸ்டாலின்r, அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினார்கள்.
தற்போது நோய்தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார் கமல்.
மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: “கொரோனா நோய் தொற்றிலிறுந்து நடிகர் கமல்ஹாஸன் முழுமையாக குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இனி வழக்கமான அவரது பணிகளை தொடரலாம் என்று தெரிவித்தனர்.
நன்றி தெரிவித்த கமல்: மருத்துவமனை வாசம் முடித்து இன்று பணிக்கு திரும்பினேன். நலமாக இருக்கிறேன்.
தன் சொந்த சகோதரன் போல் கவனித்து சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு நன்றி. நான் விரைந்து நலம் பெறவேண்டுமென வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நண்பர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர், விடுப்பை திறம்பட சமாளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட விக்ரம் படகுழு, பிக் பாஸ் குழுவினருக்கு நன்றி.
நான் விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்தும், அன்னதானம், ரத்ததானம் செய்த ரசிகர்கள், மக்கள் நீதி மைய உறுப்பினர்கள், என்னை வீட்டில் ஒருவனாக கருதி எனக்காக கண்கலங்கிய என் தமிழக மக்களுக்கும் என் நன்றிகள். பிரார்த்தனைகளுக்கு பலன் உண்டா என எனக்கு தெரியாது.
ஆனால் உங்கள் அன்பின் வலிமையை உணர்ந்தவன் நான்.
உங்கள் தூய பேரன்பு அல்லவா என்னை கொரோனாவிலிருந்து கரை சேர்த்திருக்கிறது. என் மீது அக்கறை கொண்ட மனங்களுக்கு நன்றி. உதவிய உள்ளங்களுக்கு, கலங்கிய கண்களுக்கு நன்றி. உன்னத உறவுகளை தந்த வாழ்கைக்கு நன்றி.