Home Entertainment Rajinikanth: ஜெய்லர் படத்தின் கதை – இணையத்தில் வைரல்!

Rajinikanth: ஜெய்லர் படத்தின் கதை – இணையத்தில் வைரல்!

64
0

Rajinikanrh: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 169ஆவது படமான ஜெயிலர் படத்தின் கதை பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஜெயிலர்

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் கடைசியாக அண்ணாத்தே படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது தனது 169 ஆவது படத்தில் நடிக்கின்றார் ரஜினிகாந்த்.

விஜயின் பீஸ்ட் படத்திற்கு பிறகு நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அவரது 169 ஆவது படமான ‘ஜெயிலர்’ என்று பெயரிடப்பட்ட படத்தை இயக்கி வருகிறார். நெல்சன் இயகத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை உருவாகிய நிலையில் தற்போது அதே கூட்டணியான சன் பிக்சர்ஸ் மற்றும் நெல்சன் கூட்டணியில் ரஜினியின் ஜெயிலர் படம் உருவாகிறது.

ALSO READ  ரூ. 26 லட்சத்தை ஏமாற்றிவிட்டார்கள்: பிரபல தொழில் அதிபர்கள் மீது நடிகை சினேகா புகார்

Rajinikanth: ஜெய்லர் படத்தின் கதை – இணையத்தில் வைரல்!

விஜய்யின் பீஸ்ட் படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில் தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெறவேண்டும் என்று உறுதியாக இருக்கிறார் நெல்சன். தற்போது நெல்சன் கதை மற்றும் திரைக்கதையை வடிவமைத்து வருகிறார்.

இந்த ஜெயிலர் படத்தில் நடிக்க ஐஸ்வர்யாராய் ஆணுகயுள்ளனர். இருப்பினும் இதை பற்றி அதிகார பூர்வ அறிவிப்பு வரவில்லை. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் கனடா சூப்பர்ஸ்டார் ஆன சிவராஜ் குமார் ரஜினியுடன் இணைந்து நடிக்கயுள்ளர். இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் கதை பற்றின செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ  Shankar: டாக்டர் பட்டம் பெற்ற இயக்குனர் ஷங்கர் - வைரலாகும் புகைபடங்க

கதை

அதாவது ஜெயிலர் படத்தில் சிறையில் இருக்கும் ஒரு தீவிரவாதியை தப்பிக்க வைக்க ஒரு நபர் வெளியில் இருந்து வருவதும் அதை தடுப்பதற்கு ஜெயிலர் போராடுகிறார் என்று கதை அமைக்கபட்டுள்ளது என்ற தகவல் இணையத்தில் விரலாகி வருகிறது.

அதோடு அந்த ஜெயிலர் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெய்லராகவும் கனடா நடிகரான சிவராஜ்குமார் சிறையில் இருக்கும் தீவிரவாதியாக நடிக்கிறார் என்று இணையதளத்தில் இத்தகவல் வைரலகிறது.

 

 

 

 

 

 

Leave a Reply