Home Entertainment Gautham Karthik Honeymoon: கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமாவின் ஹனிமூன் பிளான் -மனம் திறந்த மஞ்சிமா

Gautham Karthik Honeymoon: கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமாவின் ஹனிமூன் பிளான் -மனம் திறந்த மஞ்சிமா

78
0

Gautham Karthik: தேவராடம் படத்தின் போது கௌதம் கார்த்திக்கும் மஞ்சிமாவும் ஒருவரையொருவர் அறிந்த பின் வலுவான நட்பை வளர்த்துக் கொண்டனர். இதை பற்றி மஞ்சுமா மோகன் கூறுகையில், “கௌதமும் நானும் ஒரு வருடம் நண்பர்களாக இருந்தோம், என் கால் அறுவை சிகிச்சைக்கு பிறகு நான் படுக்கையில் இருந்தபோது அவர் எனக்கு உதவியாக இருந்தார். நான் சென்னையில் தனியாக வசித்து வந்தேன், அது என் வாழ்க்கையின் கடினமான கட்டங்களில் ஒன்றாகும். கவுதமும் இன்னும் சில நண்பர்களும் தான் தினமும் மாலையில் வீட்டுக்கு வந்து என்னை கூட்டிக்கொண்டு போவார்கள்” என்று மஞ்சுமா வெளிப்படுத்தினார்.

ALSO READ  Vijay VS Ajith: 2023-ம் ஆண்டு பொங்கல் ரேஸில் மீண்டும் அஜித்-விஜய் படங்களுக்கு போட்டி வர வாய்ப்பு

Also Read: ஏ.ஆர்.ரகுமான் தயாரித்து இயக்கிய லீ மஸ்க் படத்தை விர்ச்சுவல் மூலம் கண்டு ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

மஞ்சுமா மோகனும், கௌதம் கார்த்திக்கும் மூன்று வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி உறுதிமொழியை பரிமாறிக் கொண்டனர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனது திருமணத்திற்கு பிறகு, மஞ்சுமா தனது ஹனிமூன் மற்றும் கிறிஸ்துமஸுக்கு ஜோடி என்ன செய்யப்போகிறார்கள் என்பதையும் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டனர்.

ALSO READ  Jailer: ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் அற்புதமான புதிய மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது

Gautham Karthik Honeymoon: கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமாவின் ஹனிமூன் பிளான் -மனம் திறந்த மஞ்சிமா

ஒரு நேர்காணலில் நடிகை கௌதம் கார்த்திக்குடனான தனது ஹனிமூன் திட்டங்களை பற்றி மனம் திறந்தார். தம்பதியினர் திருமணத்திற்கு பிறகு தங்கள் நேரம் ஒதுக்க விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் அவர்கள் இன்னும் ஹனிமூன் அல்லது விடுமுறைக்கு திட்டமிடவில்லை. கௌதமின் ‘பத்து தல’ படப்பிடிப்பு இன்னும் நடந்து வருவதாகவும், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை தான் தனக்கு மிகவும் பிடித்தமான நேரம் என்றும், விடுமுறைக்காக தனது வீட்டை அலங்கரிப்பதில் தான் ஈடுபட போவதாகவும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply