Samantha: கடைசியாக சமந்தா நடிப்பில் யசோதா திரைபடம் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் அவர் வாடகைத் தாயாக நடித்தார், ஒரு தீவிர மருத்துவ குற்றத்தின் ரகசியங்களை தைரியத்துடன் வெளிப்படுத்தினார். தற்போது அவர் நடித்திருக்கும்¹ சாகுந்தலம் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். ஒரு அழகான புகைப்படத்துடன், “புதிய மற்றும் எளிதான தீர்மானங்கள்” பற்றி ஒரு நீண்ட குறிப்பை எழுதியுள்ளார்.
“முன்னோக்கிச் செயல்படுங்கள்… நம்மால் முடிந்ததைக் கட்டுப்படுத்துங்கள்!! புதிய மற்றும் எளிதான தீர்மானங்களுக்கான நேரம் இது என்று யோசிக்கவும். நம்மீது அன்பாகவும் மென்மையாகவும் இருப்பவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். 2023 வருடம் இனிமையாக அமையுட்டும்!!” என்று தனது புகைப்படம் பகிர்ந்து கூறியுள்ளார் சமந்தா.
இந்த ஆண்டு அக்டோபரில், மருத்துவமனையில் இருந்து ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்ட அவர். வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க எனக்கு வலிமை அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு, எனக்கு மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் நிலை இருப்பது கண்டறியப்பட்டது. சரியான பிறகு இதைப் பகிரலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட சிறிது நேரம் எடுக்கும். நான் விரைவில் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் உண்டு. உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் மேலும் ஒரு நாளை என்னால் கையாள முடியாது என்று உணர்ந்தாலும், எப்படியோ அந்த தருணம் கடந்து செல்கிறது. நான் குணமடைய இன்னும் சில நாளில் நெருங்கிவிட்டேன் என்றுதான் அர்த்தம் என்று நினைக்கிறேன். என்று சமந்தா ருத் பிரபு கூறினார்.