Home Entertainment Ajith: பாரிஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது அஜித் – டீ ஷர்ட்டில் ஆட்டோகிராப்

Ajith: பாரிஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது அஜித் – டீ ஷர்ட்டில் ஆட்டோகிராப்

26
0

Ajith: தமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத வசூல் மன்னனாக இருக்கும் அஜித் சினிமா துறையில் மட்டுமல்லாமல் ஸ்போர்ட்ஸ் கார் டிரைவிங், பைக் டிரைவிங், துப்பாக்கி சுடுதல் மற்றும் ட்ரோன் இயக்குவதில் வல்லுனராக இருந்து வருகிறார். இவ்வாறு அவர் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் தனது திறமையை பல வழிகளில் சிறப்பாக அமைத்து கொண்டார். தனக்கு ரசிகர் மன்றங்களே வேண்டாம் என்று ரசிகர் மன்றங்களை கலைத்தார், ஆனால் அவருக்கு தற்போது ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் உலகளவில் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Also Read: Thalapathy-67: தளபதி-67 படத்தின் டைட்டில் லீக் – வைரலாக்கும் ரசிகர்கள்

எச்.வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அஜித் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார் அஜித். படப்பிடிப்பு ஹைதராபாதில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது AK 61 படப்பிடிப்பில் இருந்தது ஓய்வில் இருக்கின்றனர். இதனால் அஜித் தற்போது வெளிநாடுகளில் பைக்கி சுற்றுலா சென்று வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி வைரலானது.

Also Read: Suriya Birthday: சூர்யா பிறந்தநாள் முன்னிட்டு ‘வாடிவாசல்’ ஸ்பெஷல் வீடியோ வெளியிட திட்டம்

ALSO READ  Karthi: தாதா திரைப்படத்தை பார்த்து ட்விட்டர் மூலம் பாராட்டிய கார்த்தி - மறு பதிவு செய்த கவின்

ஆட்டோகிராப்

பல இடங்களுக்கு சுற்றுலா சென்ற அஜித் தற்போது பாரிஸ் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பாரிஸ் நகரில் ஈஃபில் டவரை சுற்றிப்பார்க்க சென்ற அஜித் அங்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதினாலும் அதை டென்ஷனாகாமல் அன்பாக பேசி நலம் விசாரித்து ஆட்டோகிராஃப் இட்டார். அதோடு ரசிகர் ஒருவர் தனது டீ ஷிர்ட்டில் ஆட்டோகிராப் கேட்டுள்ளார், அஜித் அவருக்கு சிரித்துகொண்டே ஆட்டோகிராஃப் போடும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகிவருகிறது. 

Ajith: பாரிஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது அஜித் – டீ ஷர்ட்டில் ஆட்டோகிராப்

அஜீத் பைக் 

அஜீத் உலகமுழுவதும் பல வித விதமான பைக்கில் சுற்றுலா செல்லும் வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் அஜித் பலவிதமான சொந்த பைக்குகளை வைத்துள்ளார் என்று ஆச்சிர்யமாக கூறிவந்தனர் ரசிகர்கள். ஆனால் அது அஜித்தின் பைக் இல்லை என்று தெரியவந்துள்ளது, ஐரோப்பிய நாடுகளுக்கு அஜித் பயணம் செய்வதற்காக அவருக்கு பைக்குகளை கொடுத்து உதவுவது யார் தெரியுமா? அங்கு மிக பெரியாளவில் பைக் வாடகை நிலையம் வைத்திருக்கும் மார்க் கோவென்ட்ரி (Mark Coventry) என்பவர். தற்போது வெளிநாடுகளில் சுற்றி வரும் அஜித்தை ரசிகர்கள் அடையாளம் கண்டு அவரிடம் புகைப்படங்கள் வீடியோக்கள் எடுத்து வருகிறார்கள். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read: Chiyaan Vikram: கோப்ரா படத்தின் பாடல்கள் லிஸ்ட் வெளியீடு

ALSO READ  Nayanthara Tattoo: ஸ்பெயின் சென்ற நயன்தாரா போட்ட புதிய டாட்டூ - இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

AK 62 படப்பிடிப்பு

AK 61 படப்பிடிப்பில் இருந்து ஓய்வில் இருக்கும் அஜித் இம்மாத இறுதியில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. அதோடு அஜித் நடித்த வலிமை படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க அஜித் கடுமையாக உழைத்து வருகிறார். அடுத்தடுத்து படங்களிலும் கமிட்டாகி உள்ளார். அந்த வகையில் அஜித் அடுத்ததாக AK 62 படத்தில் நடிக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் அந்த படம் உருவாகிறது, இந்தாண்டு AK 61 படப்பிடிப்பு முடிந்ததும் இந்தாண்டு இறுதியில் AK 62 படப்பிடிப்பு துவங்கபடும் என்று கூறுகிறார்.

 

Leave a Reply