Home Entertainment Ajith: என்னை தல என்று பட்ட பெயர் வைத்து அழைக்க வேண்டாம் – ரசிகர்களுக்கு அஜித்...

Ajith: என்னை தல என்று பட்ட பெயர் வைத்து அழைக்க வேண்டாம் – ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்

38
0

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகவும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள அஜித் குமார் ஊடக துறைக்கும் தனது ரசிகர்களுக்கும்  வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Thala
அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடிக்கிறார். ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் இந்த படத்தை போனி கப்போர் தயாரிக்கிறார்.
தற்போது அஜித் அவரது ரசிகர்களுக்கும் ஊடக துறைக்கும் வேண்டுகோள் விடுத்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என்றும் தன்னை அஜித் அல்லது ஏ.கே என்று அழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெரும் மரியாதைக்குரிய ஊடக பொது ஜனம் மற்றும் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ, என் இயற் பெயரான அஜித் குமார், அஜித் என்றோ அல்லது ஏ. கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு எதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.
உங்கள் அனைவரின் ஆரோக்கியம் உள்ள உவகை, வெற்றி மன அமைதி, மன நிறைவு, உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன். என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
ALSO READ  நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணத்திற்கான காரணம் இதுதான்!

Leave a Reply