Home Entertainment இந்த நேரத்தில் வேண்டாம் என்று ரஜினிக்கு அன்பு கோரிக்கை வைத்த ரசிகர்கள்

இந்த நேரத்தில் வேண்டாம் என்று ரஜினிக்கு அன்பு கோரிக்கை வைத்த ரசிகர்கள்

68
0

கொரோனா வைரஸ் இந்தியாவை விட்டு இன்னும் போகவில்லை என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. கொரோனா பிரச்சனைக்கு மத்தியிலும் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

Pocket Cinema News

அப்படி ஷூட்டிங் நடக்கும் இடங்களில் இருந்து நடிகைகள், நடிகர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கு படத்தில் நடிக்க  ஹைதராபாத் சென்ற சரத்குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ALSO READ  SK: சிவகார்த்திகேயனும் அவரது மனைவி ஆர்த்தியும் குழந்தை பருவத்தில் ஒன்றாக இருக்கும் புகைப்படம்

சரத்குமாருக்கு கொரோனா என்கிற செய்தியை பார்த்ததுமே ரஜினி ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வந்த அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் வரும் 15ம் தேதி ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறார்கள். அடுத்த மாதம் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள ரஜினிக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பும் அதிகம் என்பதால். இந்த நேரத்தில் ஹைதராபாத்தில் ரஜினிகந்த ஷூட்டிங்கில் பங்கேற்பது பாதுகாப்பு இல்லை என்று ரசிகர்கள் கவலை.

ALSO READ  Simbu: ரசிகர்களை நேரில் சந்திக்க இருக்கும் சிம்பு: உற்சாகத்தில் ரசிகர்கள்

ஹைதராபாத் போக வேண்டாம் என்று ரசிகர்கள் ரஜினிக்கு அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு அண்ணாத்த பட வேலையை முடிக்க விரும்புகிறார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply