விருமன்
- வெளியீடு தேதி: ஆகஸ்ட் 12, 2022
- நடிகர்கள்: கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், ஆர். கே சுரேஷ், கருணாஸ், சூரி, ரோபோ சங்கர்.
- இயக்குனர்: எம். முத்தையா.
- ஒளிப்பதிவு: செல்வகுமார் எஸ்.கே.
- இசை: யுவன் சங்கர் ராஜா.
- தயாரிப்பு நிறுவனம்: 2டி என்டர்டெயின்மென்ட்
- தயரிப்பாளர்: சூர்யா.
கதை
வேலைக்காரியோடு தொடர்பு வைத்திருக்ம் முனியாண்டி (பிரகாஷ் ராஜ்) இது அறிந்து மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார் (மனைவி) சரண்யா பொன்வண்ணன். அம்மா சாவுக்கு தன் அப்பா தான் காரணம் என்று நினைக்கும் விருமன், (கார்த்தி) சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறுகிறான். தன் மாமான் குஸ்தி வாத்தியாரான ராஜ்கிரனுடன் சேர்ந்து கொள்கிறான் விருமன். பிறகு வளர்ந்து பெரியவனான நிலையிலும் அப்பாவை பழிவாங்க போராடி, கடைசியில் அப்பா, மகன் சேர்ந்தார்களா? இல்லை என்ன ஆனது என்பது தான் கிளைமேக்ஸ் இதுதான் விருமன் படத்தின் கதை.
முனியாண்டி 4வது மகன் தான் விருமன். மற்ற மூன்று அண்ணன்கள் அப்பாவோடு இருக்கின்றனர். அந்த மூன்று பேருக்கும் பிரச்சனைகள் இருக்கும் அதை விருமன் ஒவ்வொன்றாக சரி செய்து மூன்று அண்ணன்கலை தன் பக்கம் இழுத்து அப்பாவை பழிவாங்க நினைக்கிறான் விருமன். இப்படத்தில் நக்கல், நையாண்டி, ஆக்ஷன் என கார்த்தி வேற லெவல் என்று சொல்லலாம்.
தங்கையின் சாவுக்கு (சரண்யா பொன்வண்ணன்) மச்சான் (முனியாண்டி) தான் காரணம் என்பதால், கருணாஸ் மற்றும் ராஜ்கிரணும் சகோதரர்கள் பிரகாஷ் ராஜுக்கு எதிராகவே இருப்பார்கள். மற்றும் மேலும் வில்லன் ஆர். கே சுரேஷ் உள்ளிட்ட இருப்பவர்கள். சிலர் சொத்துக்களை அபகரிக்க போடும் திட்டம்கள். இவை விருமன் எப்படி முறியடிக்கிறான், என்பது தான் மீதி கதை.
பிளஸ்
இந்த படம் ஏ சென்டர் ஆடியன்ஸுக்கு பிடிக்கும் என்றால் அது சந்தேகம் தான். பி அண்ட் சி ஆடியன்ஸுக்கு கண்டிப்பா பிடிக்கும் அந்த நோக்கத்துடன் தான் முத்தையா படத்தை இயக்கி உள்ளார். கார்த்தி, அதிதி ஷங்கரின் நடிப்பு படத்திற்கு மிக பெரிய பலம். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிஜிஎம் (BGM) மற்றும் பாடல்கள் (Songs) அந்த பாடல்கள் எடுக்கப்பட்ட விதம் என அனைத்துமே சூப்பர்.
மைனஸ்
விருமன் படத்தில் மெயின் வில்லன் என்றால் அது முனியாண்டி (பிரகாஷ் ராஜ்) தான். நாம் பல படங்களில் பார்த்த அதே நடிப்பை இங்கேயும் ஏன் கொடுத்துள்ளார். இது சலித்து போன ஒன்று. சூரி மற்றும் ரோபா சங்கர் பண்ணும் காமெடி படத்துக்கு மைனஸ். வழக்கமான முத்தையாவின் கொம்பன் மாற்று கார்த்தி அறிமுக படம் பருத்திவீரன் ட்ரீட்மென்ட் தான் இதுவும் சலித்து போன ஒன்று. இந்த படம் சொந்தங்களை இணைக்கும் கிராமத்து மசாலா படங்களின் கலவையாக கொடுத்திருக்கிறார். இப்படத்தை ஜாலியாக குடும்பத்துடன் ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்.