ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை திரைபடமாக எடுத்துள்ளனர். ஏழையாக இருந்தாலும் அவர்களை ஏரோப்ளேனில் பறக்க வைக்க வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்ட ஏர் நிறுவன அதிபரின் கதைதான் ‘சூரரைப் போற்று’.
கதை:
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் நெடுமாறன் ராஜாங்கம் (சூர்யா). அப்பா வாத்தியார் (பூ ராமு) அஹிம்சா வழி மனுவால் சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்த முடியவில்லை. ஆனால், போராட்ட முறை கடபிடிக்கிறார் அவரின் மகன் நெடுமாறன் ராஜாங்கம் (சூர்யா). இது அவரது அப்பாவுக்குப் பிடிக்காமல் மோதல் ஏற்படுகிறது, சூர்யா ராணுவப் பயிற்சிக்குத் தேர்வாகிச் செல்கிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வுபெற்று சொந்த ஊர் திரும்புகிறார் நெடுமாறன் ராஜாங்கம்(சூர்யா) .
உழைக்கும் தொழிலாளர்கள், ஏர் ஓட்டும் விவசாயிகள், விமானத்தில் பறக்கும் கனவை, நிறைவேற்றும் விதமாக, 1 ரூபாயில் கூட விமானத்தில் பறக்க முடியும் என்பதை நிரூபிக்கப் போராடுகிறார். இந்த போராட்டத்தில் சூர்யா ஜெயித்தாரா இல்லையா என்பது தான் ‘சூரரைப் போற்று’ படத்தின் திரைக்கதை.
கதைக்கு பிளஸ்:
ஜி.ஆர்.கோபிநாத்தின், எழுதிய ‘சிம்பிள் ஃப்ளை’ நூலை அடிப்படையாகக் கொண்டு ‘சூரரைப் போற்று‘ படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா.சூர்யா மாறனாகவே வாழ்ந்திருக்கிறார். அபர்ணா, ஊர்வசி மேடம், கருணாஸ் என அனைவரும் சிறப்பாக தங்கள் வேலையை செய்துள்ளனர்.
அப்பாவுக்கு நேர்ந்ததை உணர்ந்து ஊருக்கு வர முடியாமல் விமானக் கட்டணத்துக்கு வழியில்லாமல் அங்கு இருப்பவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி பிச்சையாகக் கேட்கும்போதும், கண்ணீரில் நனைய வைக்கிறார்.
அபர்ணா பாலமுரளி, கதாபாத்திரம் அட்டகாசம். அவர் திருமணத்துக்குப் போடும் கண்டிஷன்கள், சூர்யா உடனான உரசலுக்குப் பிறகான நடவடிக்கை, ரூ.16 கோடி டீலை சூர்யா புறக்கணித்ததற்கான ரியாக்ஷன். அவரின் கதாபாத்திரம். படத்திற்கு பெரிய பிளஸ்.
‘உன்னை நம்பி இருக்கோம்டா. ஜெயிச்சிருடா’ என்று சொல்லும் ஊர்வசியின் நடிப்பில் அவ்வளவு யதார்த்தம். ‘பூ’ ராமு மகன் மீதான பாசத்தை அப்படியே வெளிபடத்தியிருக்கிறார். கருணாஸ், சூர்யாவின் உற்ற நண்பர்களாக வரும் விவேக் பிரசன்னா, கிருஷ்ணகுமார் ஆகியோர் பொருத்தமான பத்திரங்கள்.
நிகேத் பொம்மியின் கேமரா கோணங்களில் ஈர்க்கிறார். ஜி.வி.பிரகாஷின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.
”ரத்தன் டாடாவாலேயே இங்கே ஒரு ஏர்லைன் ஆரம்பிக்க முடியலை”. ”நீங்க யார் மாறன், உனக்கெல்லாம் எதுக்குய்யா பெரிய மனுஷங்க பண்ற பிசினஸ். பேசாம ஊருக்குப் போய் மாடு மேய்க்கிற வேலையைப் பாரு” என்ற, புறக்கணிப்புகளை, ஏமாற்றங்களை ஒவ்வொன்றாய்ச் சொல்லும் எமோஷனல் கலந்து சொன்ன விதம் எடுபடுகிறது.
கதைக்கு மைனஸ்:
குடியரசுத் தலைவரை ஈசியா அசால்ட்டாகச் சந்திக்க முடியுமா, விமானத்தை அசாதாரணமாக ராணுவப் பயிற்சி மையத்தில் அத்துமீறித் தரையிறக்க முடியுமா, (சைனா ஃப்ளைட் வந்துச்சினு சுட்டு பொசிகிருக்கமாட்டாங்க) சூரியா பைக்கில் ராணுவ பயிற்சி மையதில் அத்துமீறிநுழைவது சாதியமா (தீவிரவாதி வந்துட்டாங்கணு துப்பாக்கி வச்சி சுற்றமாட்டங்க ) தொழிலதிபர்களுக்காக அரசு அதிகாரிகள் அவ்வளவு ரிஸ்க் எடுப்பார்களா போன்ற கேள்விகளும், செயற்கையான சில காட்சிகள் படத்திற்கு மைனஸ்.
முடிவு:
மொத்தத்தில்,சூரரைப் போற்று ஒரு புது அனுபவம், கண்டிப்பாக பார்க்கலாம்.