Home Cinema Review சிம்புவின் மாநாடு படம் திரைவிமர்சம்

சிம்புவின் மாநாடு படம் திரைவிமர்சம்

50
0

வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடித்திருக்கும் மாநாடு படம் வெளியாகுமா ஆகாத என்ற மிகுந்த குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் ஒருவழியாக படம் வெளியாகிவிட்டது.

மாநாடு
படம் எப்படி இருக்கு?

திரில்லர் மற்றும் அறிவியல் திரைப்படமாக வெளிவந்துள்ள மாநாடு படம் மக்கள் மனதில் பெரும் இடத்தை பிடித்துள்ளது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு எஸ். ஜே சூரியா இணைந்து நடித்து படத்தை மிரட்டியுள்ளனர்.
நம் வாழ்க்கையில் நடக்கபோவது முன்னரே தெரிந்து விட்டால் வாழ்கை எப்படி இருக்கும்? அது தான் இந்த மாநாடு திரைபடத்தில் காட்டியுள்ளனர்.
நடகும் விஷயம் முன்னரே தெரிவது
துபாயில் இருந்து கோவை வரும் கதாநாயகன் சிம்பு மனதில் நடக்கும் புதிய உணர்வு நடக்கபோகும் விஷயம் முன்கூட்டியே அறியம் ஆற்றலை புரிந்துகொண்டு தன்னுடன் இருக்கும் பிரேம்ஜி மற்றும் நண்பர்களிடம் இதை பகிர்ந்து கொள்கிறார்.
நவம்பர் 10 அன்று நடக்கும் ஒரு மிகப்பெரிய மாநாட்டில் நடக்கும் அசம்பாவிதங்கள் சிம்புவின் கண்முன்னே வந்து செல்கிறது.
அந்த அசம்பாவித சம்பவங்களை எப்படி தடுப்பது. சூழ்நிலையை புரிந்து அனைவரையும் எப்படி காப்பாற்றி ஒரு சராசரியான நிலைக்கு எப்படி கொண்டு வருவது என்பது தான் மீதி கதை.
டைம் லூப்

டைம் லூப் என்ற விஷயம் சிம்புவுக்கு எப்படி நடகிறதோ அதே போல் வில்லனான் எஸ்.ஜே சூரியாவுகும் இது நடக்கிறது ஏகப்பட்ட ஹாலிவுட் படங்களில் இந்த டைம் லூப் என்ற விஷயம் வந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றது போல் வெங்கட்பிரபு படத்தை சிறப்பாக இயக்கியுள்ளர்.
ஆனால் படத்தின் சில இடங்களில் திரும்ப திரும்ப வந்த காட்சிகள் சலிப்பை குடுத்தாலும், யுவன்ஷங்கர் ராஜாவின்
 பிஜிஎம் ஒரு மிகப்பெரிய பிளஸ்.
இந்த படத்தில் எஸ். ஜே சூரியாவின் நடிப்பு இதுவரை பார்க்காத ஒரு நடிப்பக இருக்கிறது, மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்.
பொறுமையாக பார்த்தால் குடும்பத்துடன் போய் பார்த்து ரசிக்கும் படமாக தான் இருக்கிறது. பிரேம்ஜி சிம்பு இணைந்து நடித்திருக்கும் கட்சிகளில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம்.
ஒட்டுமொத்தமாக மாநாடு படம் சிம்பு ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட் என்று தான் சொல்லவேண்டும்.

ALSO READ  Kollywood: ஜெயிலர் படத்தின் முதல் ரிவ்யூ வெளியாகியுள்ளது - உற்சாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள்

Leave a Reply