Thalaivar 170: ரஜினிகாந்தின் ‘தலைவர் 170′ ஆவது படத்தை விரைவில் துவங்கவுள்ளனர், மேலும் படத்தை பற்றின பரபரப்பான தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இப்படத்தை டி.ஜே. ஜெய் பீம்’ புகழ் ஞானவேல் இயக்குகிறார். ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்க, லைகா புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரிக்கிறது.
‘தலைவர் 170’ ஆவது படத்தில் முக்கிய வில்லனாக நடிக்க சியான் விக்ரமை அணுகியதாகவும், லைக்கா உரிமையாளர் சுபாஸ்கரன் அவர்கள் ஐம்பது கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கபட்டது என்ற தகவலை நாம் ஏற்கனவே அறிந்திருப்போம். ஆனால் இப்போது விக்ரமால் தேதிகளை ஒதுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் சூடான தகவல் என்னவெனில், ஆக்ஷன் கிங் அர்ஜுனை அணுகியுள்ளதாகவும், மேலும் அவர் ஸ்கிரிப்ட் மற்றும் அவரது பாத்திரத்தைக் கேட்டபின் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. ஒப்பந்தம் நிறைவேறினால் ரஜினியும் அர்ஜுனும் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்வது இதுவே முதல் முறை.
‘தலைவர் 170’ படத்தின் கதைக்களம், அப்பாவி மக்களின் போலி என்கவுன்டர்களுக்கு எதிராகப் போராடும் ஓய்வுபெற்ற போலீஸ்காரராக ரஜினி நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் பொறுப்புள்ள ஒரு சமுக அக்கரை கொண்ட ஒரு கதாபத்திரதில் நடிப்பார் என்று வித்யாசமான திரைக்கதை மற்றும் அதிரடி காட்சிகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.