Home Cinema News Vadivelu: துணிவு அல்லது வாரிசு முதலில் எந்த படம் பார்ப்பீங்க – வடிவேலு அளித்த பதில்...

Vadivelu: துணிவு அல்லது வாரிசு முதலில் எந்த படம் பார்ப்பீங்க – வடிவேலு அளித்த பதில் இதோ

44
0

Vadivelu: இனி வரும் படங்களில் முக்கிய வேடங்களில் நடிப்பதில்லை என்று வடிவேலு தனது வாழ்க்கையில் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளதாகவும். அதற்கு பதிலாக மற்ற ஹீரோக்களுடன் துணை வேடங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் முடிவை எடுத்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது. தற்போது எவர்கிரீன் காமெடியன் வடிவேலு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vadivelu: துணிவு அல்லது வாரிசு முதலில் எந்த படம் பார்ப்பீங்க - வடிவேலு அளித்த பதில் இதோ

செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, அமைதி அடைய அனைவரும் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று பேசினார். ஆனால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது அவரது பொங்கல் படங்கள் எந்த படம் (வாரிசு அல்லது துணிவு) முதலில் எந்த படம் பார்ப்பார் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில், வடிவேலு எந்த பெயரையும் குறிப்பிடவில்லை, ஆனால் இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

திரைப்படங்களில் முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்க வேண்டும், ஓரளவு லாபம் பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவரது இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வாரிசு படத்தில் விஜய், துணிவு படத்தில் அஜித் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பெரிய இடைவெளிக்குப் பிறகு பொங்கலுக்கு இந்தப் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் மோதுகின்றன. வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடக்கிறது, துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள் நாளை வெளியாகிறது.

Leave a Reply