Home Cinema News Vijay 68: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ பூஜையுடன் எப்போது தொடங்கப்படும்?

Vijay 68: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ பூஜையுடன் எப்போது தொடங்கப்படும்?

158
0

Vijay 68: தளபதி விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு, ‘தளபதி 68’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் இணைந்துள்ளனர். தளபதி விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் பிஸியாக நடிக்கிறார். முன்னதாக விஜய்யின் அடுத்த படத்திற்கு தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி மற்றும் அட்லி ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இந்நிலையில் விஜய்யை இயக்கும் வாய்ப்பை வெங்கட் பிரபு பெற்றுளார். ஆனால் ‘லியோ’ படத்தைவிட தளபதியின் 68 ஆவது படத்தை பற்றின செய்திகள் தான் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

ALSO READ  VV 21: 'ராட்சசன்' குழு மீண்டும் இணைவதை உறுதி செய்த முன்னணி தயாரிப்பு நிறுவனம்.!

Vijay 68: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 68' பூஜையுடன் எப்போது தொடங்கப்படும்?

சமீபத்திய தகவலின் படி, படம் விஜய்யின் பிறந்தநாளான வருகிற ஜூன் 22 ஆம் தேதியில் பிரமாண்டமான முறையில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் தயாரிப்பு தரப்பில் இருந்து இதுபற்றி அதிகாரபூர்வமான அறிவிப்புகள் விரைவில் வரும் என்று கருதப்படுகிறது.

ALSO READ  Indian 2: இந்தியன் 2 படப்பிடிபிற்காக தாய்வான் சென்ற ஷங்கர் - வெளியான வைரல் புகைப்படம்

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைகிறார். மேலும் சுவாரஸ்யமான புதுப்பிப்புகளுக்கு இந்தப் பக்கத்தை தொடர்ந்து இணைந்திருங்கள்

Leave a Reply