Home Cinema News Maaveeran: சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் டிக்கெட் முன்பதிவு எப்போது?

Maaveeran: சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் டிக்கெட் முன்பதிவு எப்போது?

157
0

Maaveeran: தேசிய விருது வென்ற மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் மாவீரன். இந்தப் படத்தில் பிரபல இயக்குனரின் மகளான அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் மாவீரன் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11, அன்று திரையரங்குகளில் வரும் என்று அறிவிக்கப்பட்டது.

நடிகர் சிவகர்த்திகேயன் ஆரம்ப காலகட்டத்திலிருந்தே ரஜினியின் தீவிர ரசிகராவார். ரஜினியை போல் பேசி மிமிகிரி செய்து காட்டுவார், தற்போது சிவகார்த்திகேயனும் ஹீரோ ஆகிவிட்ட நிலையில் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் மற்றும் சிவகார்த்திகேயனின் மாவீரன் ஆகிய இரண்டு படங்களும் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. ரஜினியின் ஜெயிலர் படம் தமிழில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று. எனவே, ஜெயிலருடன் இணைந்து மாவீரன் வெளியானால், திரையரங்கு எண்ணிக்கை மற்றும் வசூல் ஆகியவற்றில் படம் பெரிதும் பாதிக்கப்படலாம்.

ALSO READ  Vijay: வாரிசு படத்தில் தளபதி விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது

Maaveeran: சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் டிக்கெட் முன்பதிவு எப்போது?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ ஜூலைக்கு முன்பதிவாகும் என இப்போது தமிழ்த் திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. முன்பதிவு பற்றின அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சாந்தி டாக்கீஸ் தாயாரிக்கும் மாவீரன் தெலுங்கில் மகாவீருடு என்ற பெயரில் வெளியாகவுள்ளது. பரத் சங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மிஷ்கின், யோகி பாபு, சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Leave a Reply