Karthi: ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளார்.
பருத்தி வீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் கார்த்திக் அவர் நடிப்பில் வெளிவந்த ஆயரத்தில் ஒருவன், பய்யா, தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, அலெக்ஸ் பாண்டி, கைதி என்று கார்த்திக் நடித்த படங்கள் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது.
Also Read: Kamal Haasan: பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன் புதிய படம்
அடுத்ததாக அவரது நடிப்பில் விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் என்று அடுத்தடுத்து வெளிவர தயாராக இருக்கிறது. தற்போது கார்த்திக் ராஜு முறுகன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். கதாநாயகனாக, அப்பாவாக, வயதான தோற்றம், சூப்பர் டுலெக்ஸ் படத்தில் ஓர் பெண் தோற்றத்தில் என்று பன் முகங்களில் நடித்த வந்த விஜய்சேதுபதி தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் ரஜினி, விஜய், கமலுடன் வில்லனாக நடித்துள்ளார் விஜய்சேதுபதி இவரின் வில்லன் கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டது. தற்போது கார்த்திக் நடிப்பில் ராஜு முருகன் இயக்கும் ஒரு புதிய படத்தில் விஜய்சேதுபதி விலனாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் தற்போது கால்ஷீட் பிரச்னையால் இப்படத்தில் இருந்து விலகிவிட்டார் விஜய்சேதுபதி.
Also Read: PS-1: பொன்னையன் செல்வன்-1 OTT பிரமாண்டமான விலை – எந்த நிறுவனம் பெற்றது தெரியுமா?
விஜய்சேதுபதி ஒரு வருடத்தில் 10 அல்லது 12 படங்களில் நடித்து விடுவார். அந்த வகையில் 19(1)(A), பிசாசு 2, விடுதலை, 800, இடம் பொருள் ஏவல், காந்தி டாக்ஸ், சூது கவ்வும் 2, யாதும் ஊரே யாவரும் கேளிர், ஜாவன், VJS 46 போன்ற படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதனால் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க கால்ஷீட் கிடைக்கவில்லயாம்.