Home Cinema News Cobra Release Date: விக்ரம் நடித்த கோப்ரா வெளியீடு தேதி தள்ளிப் போகிறதா?

Cobra Release Date: விக்ரம் நடித்த கோப்ரா வெளியீடு தேதி தள்ளிப் போகிறதா?

54
0

Cobra: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இந்த திரில்லர் திரைப்படத்தில் கேஜிஎஃப் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது பரபரப்பான செய்தி ஒன்று பரவி வருகிறது.

Also Read: Liger Trailer Review | லைகர் டிரைலர் விமர்சனம்

இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 11, 2022 அன்று திரைக்கு வரத் திட்டமிடப்பட்டது. இந்நிலையில் தற்போது இப்படம் தள்ளி போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது சிஜி பணிகள் இன்னும் நிலுவையில் உள்ளதால் படக்குழுவால் படத்தை திட்டமிட்ட தேதியில் வெளியிட சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா காரணமாக சுமார் 2 ஆண்டுகளாக கோப்ரா படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது இப்படம் ஆகஸ்ட் 31, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும், படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்களை அறிவிக்க இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  Simbu: பத்து தல படத்தின் சென்சார் ரிப்போர்ட் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

Cobra Release Date: விக்ரம் நடித்த கோப்ரா வெளியீடு தேதி தள்ளிப் போகிறதா?

இப்படத்தில் மிருணாளினி ரவி, இர்பான் பதான், ரோஷன் மேத்யூ, மியா ஜார்ஜ், கே.எஸ்.ரவிகுமார் மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆதரவு அளித்துள்ளது.

Leave a Reply