Vikram: கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி யாது விக்ரம் திரைப்படம். கடந்த ஜுன் 3ம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவர்ப்பாய் பெற்று புதிய வசூல் சாதனை படைத்துவருக்கிறது.
உலக நாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவிற்கு தனது படங்கள் மூலம் நிறைய பெருமை தேடித் தந்தவர். தனது படைப்புகள் மூலம் பல கலைஞர்கள் உருவாக்கியவர் என்ற பெருமை கமல்ஹாசனை சேரும். காரணம் கமல்ஹாசன் படங்கள் பார்த்து சினிமாவில் நடிக்க காலடி வைத்தவர்கள் பலர் சினிமாவில் இருக்கிறார்கள். அது மட்டும் இல்லை. அவரது படங்கள் பார்த்து தான் நான் இதையெல்லாம் கற்றுக்கொண்டேன் என்று சொல்லும் ஆள்விறக்கு பல கலைஞர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலயில் கமல்ஹாசன் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த ஜுன் 3ம் தேதி படு மாஸாக வெளியாகி தற்போது வரை புதிய சாதனைகள் படைத்து வருகிறது. விக்ரம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல அமோக வரவர்ப்பாய் பெற்றுள்ளது. ரிலீஸ் ஆன நாள் முதல் படத்திற்கான நல்ல விமர்சனங்கள் பெற்று, தமிழ் சினிமாவிள் புதிய வசூல் சாதனைகள் படைத்துவருகிறது.
இந்நிலயில் ரூ. 120 முதல் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாரான விக்ரம் திரைப்படம். தற்போது நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த வருடத்தில் (2022) வெளியான படங்களில் டாப் ஹிட் லிஸ்டில் விக்ரம் படம் உள்ளது. தற்போது இந்த படத்தின் வசூல் நிலவரம் 5வது வார முடிவில், விக்ரம் படம் உலகம் முழுவதும் ரூ. 420 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.