Home Cinema News Vijay: வாரிசு ஒரு ஹாலிவுட் படத்தின் காப்பி – பரபரப்பை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்

Vijay: வாரிசு ஒரு ஹாலிவுட் படத்தின் காப்பி – பரபரப்பை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்

34
0

Vijay: எந்த ஒரு நடிகரின் படம் வெளியானாலும் அந்த படத்தை கடுமையாக விமர்சித்து யூடியூப் மற்றும் டிவிட்டரில் போஸ்ட் போடுவது ப்ளூ சட்டை மாறன் வழக்கம். 

ஆரம்பத்தில் படங்கள் வெளியானால் அதை விமர்சித்து வந்த ப்ளூ சட்டை இப்போது படங்களின் அறிவிப்பையும் விமர்சித்து டிவிட் போட்டு விடுகிறார். குறிப்பாக பெரியநடிகர்களின் படங்களை விமர்சித்து அனைவரின் கவனத்தை ஈ்க்கிறார். இந்த நிலையில் வாரிசு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ப்ளூ சட்டை மாறன் 2008 ஆம் ஆண்டு வெளியான லார்கோ வின்ச் (Larco Winch) என்ற ஹாலிவுட் படத்தின் போஸ்டரை பகிர்ந்து இந்த படத்தின் கதைதான் விஜய் நடிக்கும் வாரிசு படம் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

தனது டுவீட்டில் ஒரு பெரிய கோடீஸ்வரன் கொலை செய்யப்பட்ட பின் அவரின் ரகசிய வளர்ப்பு மகன் தான் வாரிசு என்பதை சட்டபூர்வமாக நிரூபிப்பது. தனது தந்தையின் நிதி சாம்ராஜ்யத்தை கைப்பற்றுவதற்கு நடக்கும் சதிவேலைகள் தடுத்து நிறுத்துவது தான் லாக்ரோ வின்ச் படத்தின்கதை. வாரிசு இந்த படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்கா அல்லது தழுவலா அல்லது காபியா? என பதிவிட்டுள்ளார்.

Vijay: வாரிசு ஒரு ஹாலிவுட் படத்தின் காப்பி - பரபரப்பை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்

அதோடு லேக்ரோ வின்ச் படத்தின் கதையும் விஜயின் வாரிசு படத்தின் கதையும் கிட்டதிட்ட ஒரே பாணியில் இருப்பதாக பலர் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது வாரிசு ஃபர்ஸ்ட் லுக், கபாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போல் இருக்கிறது என்று சிலர் விமர்சிக்கின்றனர். அதே சமயம் ப்ளூ சட்டையை திட்டி தீர்த்து வருகின்றனர் ரசிகர்கள்.

ALSO READ  LEO: விஜய்யின் 'லியோ' படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து 7 நிமிட மாஸ் வீடியோ வெளியிடப்பட்டது

Leave a Reply