Home Cinema News Vijay 68: ‘தளபதி 68’ படத்தில் விஜய்யுடன் இந்த 19 வயது இளம் தெலுங்கு நடிகை...

Vijay 68: ‘தளபதி 68’ படத்தில் விஜய்யுடன் இந்த 19 வயது இளம் தெலுங்கு நடிகை ஜோடி சேருகிறாரா?

65
0

Vijay 68: தளபதி விஜய் தற்போது ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இதற்கிடையில், தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று அழைக்கப்படும் நடிகரின் அடுத்த படத்தை பற்றின செய்து ஏற்கனவே இணையத்தில் வெளிவரத் தொடங்கியுள்ளது.

தளபதி 68 படத்தை புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸின் தயாரிக்கும் 100வது திரைப்படம் என்றும், இந்த படத்தை டோலிவுட் ஹிட்மேக்கர் கோபிசந்த் மலினேனி இயக்குவார் என்று ஏற்கனவே தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த படம் இருமொழி முயற்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தெலுங்கில் பிரபலமான 19 வயது நடிகை விஜய்யுடன்  ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ  Kollywood: உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது!

Vijay 68: 'தளபதி 68' படத்தில் விஜய்யுடன் இந்த 19 வயது இளம் தெலுங்கு நடிகை ஜோடி சேருகிறாரா?

இளம் வயதான பிரபல தெலுங்கு நடிகை கிருத்தி ஷெட்டி, தளபதி 68 படத்தில் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர் தனது முதல் படமான ‘உப்பேனா’ மூலம் புகழ் பெற்றார் மேலும் ‘ஷ்யாம் சிங்க ராய்’ மற்றும் ‘தி வாரியர்’ படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். விஜயின் 68 ஆவது படத்தில் கீர்த்தி ஷெட்டியை நாயகியாக நடிக்க வைக்க கோபிசந்த் மலினேனி உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ALSO READ  Vaathi Joined 100 Crore Club: வாத்தி 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது

இருப்பினும், விஷயங்கள் அதிகாரப்பூர்வமாக வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும். அவரது சமீபத்திய இருமொழி வெளியீடான ‘கஸ்டடி’, தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘கஸ்டடி’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார் கிருத்தி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் த்ரிஷா தான் தனது ரோல் மாடல் என்றும் அவர் கூறினார். இந்த செய்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Reply