Venkat Prabu: இயக்குனர் வெங்கட் பிரபுவும், நடிகர் நாக சைதன்யாவும் திடீரென மோதிக்கொள்ள பிரேம்ஜி அவர்களை சமாதானப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடித்து வரும் திரைப்படம் ‘கஸ்டடி’ இவர்கள் இருவரும் CSK மற்றும் SRH அணி ஐபிஎல்லில் இந்த ஆண்டு 2023 இல் மோதுவதற்கு முன் எந்த அணி சிறந்ததாக இருந்தது என்பது குறித்து வெளிப்படையாக வாதிடுகின்றனர்.
SRH ல் நடராஜன் ஒரு விக்கெட் எடுத்தா நீ சந்தோஷபடமாட்ட?’ என்று அண்ணனிடமும், நம்ப டோனி விக்கெட் அடிச்சா சந்தோஷ படமாட்ட என்று நாக சைதன்யாவிடமும் சமாதானம்ப்படுதும் விதமாக பேசுகிறார் பிரேம்ஜி. அதோடு இது ஹைதராபாத் vs சென்னை கடயாது, இது ஹைதராபாத் மற்றும் சென்னை, ஏன்னா ‘கஸ்டடி’ இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது என்று பிரேம்ஜி கூறுகிறார். ஒரு நகைச்சுவையாக பகிர்ந்துள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
+
= #Custody has taken over #IPL2023 excitement
Yuvasamrat @chay_akkineni & @vp_offl cheering for clash of southern derby
Fun filled complete episode from tomorrow
#SRHvCSK #Custody #CustodyOnMay12#CustodyOnMay12 – https://t.co/1sIGM960wi pic.twitter.com/BGJGBRmntN
— Naga Chaitanya FC (@ChayAkkineni_FC) April 19, 2023
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கஸ்டடி’ படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளனர். இப்படத்தில் நாகசைதன்யா அக்கினேனி, அரவிந்த் சுவாமி, ஆர். சரத்குமார், க்ரித்தி ஷெட்டி, வெண்ணிலா கிஷோர், பிரேமி விஸ்வநாத், சம்பத் ராஜ், பிரேம்கி அமரன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் மே 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.