Home Cinema News Valimai: பாக்ஸ் ஆபிஸ்சில் சாதனை படைக்க போகும் வலிமை – முதல் காட்சி எப்போது தெரியுமா?

Valimai: பாக்ஸ் ஆபிஸ்சில் சாதனை படைக்க போகும் வலிமை – முதல் காட்சி எப்போது தெரியுமா?

55
0

Ajith: வலிமை படத்தின் முதல் காட்சி எந்த நேரத்திற்கு வெளியாகும் என்று அறிவித்தது தமிழக தியேட்டர்கள்.

Valimai

எச்.வித்னோத் இயக்கதில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை.  நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. கூடிய விரைவில் வலிமை படம் அடுத்த ஆண்டு (2022) பொங்கல் பரிசாக திரைக்கு வர காத்திருக்கிறது. வலிமை படத்தில் இருந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை வாங்கியுள்ளது.

ALSO READ  Ayalaan: சிவகார்த்திகேயனின் 'அயலான்' இரண்டாவது சிங்கிள் மற்றும் ஆடியோ வெளியீட்டு அறிவிப்பு

வலிமை படத்தின் வெளியிட்டு தேதி இன்னும் அறிவிக்கவில்லை ஆனால் அதற்குள் படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் வலிமைபடதின் தமிழக ரீலீஸ் உரிமையை மதுரை அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் வாங்கியுள்ளது.

Valimai

அதுமட்டுமல்லாது சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டர், திண்டுக்கல்லில் உள்ள உமா ராஜேந்திர தியேட்டர், வலிமை படம் வெளியாகும் தினமன்று நள்ளிரவு 1 மணிக்கு முதல் காட்சி வெளியக்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதோடு ரசிகர்களுக்காக முதல் நாளில் 8 காட்சிகள் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  Suriya: இந்த ஆண்டு இரண்டு பெரிய படங்கள் வெளியீடு கேட்டு சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி

 

 

 

 

Leave a Reply