Home Cinema News Bollywood: தி புல் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்

Bollywood: தி புல் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்

119
0

Bollywood: சல்மான் கான் கடைசியாக மணீஷ் சர்மா இயக்கிய டைகர் 3 படத்தில் நடித்தார் என்பது அனைவரு அறிந்ததே. தற்போது சல்மான் கான் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு தி புல் என்று பெயரிடப்பட்டுள்ளது. பில்லா, ஆரம்பம், சர்வம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இந்த படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படம் “Operation Cactus” (ஆபரேஷன் கச்டஸ்) அடிப்படையிலானது.

ALSO READ  Indian 2: கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் தேதி

ஆபரேஷன் கச்டஸ் என்பது 1988 ஆம் ஆண்டு மாலத்தீவு அதிபரை தொழிலதிபரிடம் இருந்து காப்பாற்ற இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையாகும். இந்த படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது சமீபத்திய செய்தி. த்ரிஷா சல்மான் கானின் தீவிர ரசிகை, மேலும் இவர் பலமுறை பாலிவுட் மெகாஸ்டாருடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  Kollywood: சிவகார்த்திகேயனின் 'SK21' தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் இந்த தேதியில் வெளியாகும்

Bollywood: தி புல் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்

இந்த செய்தி உண்மையாக இருந்தால், 2010 இல் வந்த கட்டா மீத்தாவுக்குப் பிறகு ஹிந்தியில் த்ரிஷா நடிக்கும் இரண்டாவது படமாக தி புல் இருக்கும். கரண் ஜோஹர் தயாரிக்கும் இந்தப் படத்தில் சல்மான் கான் துணை ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். படம் பிப்ரவரி 2024 இல் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply