Home Cinema News Trisha: லியோ படத்தின் பற்றிய ஒரு ஹாட் அப்டேட்டை த்ரிஷா செட்டில் இருந்து பகிர்ந்துள்ளார்!

Trisha: லியோ படத்தின் பற்றிய ஒரு ஹாட் அப்டேட்டை த்ரிஷா செட்டில் இருந்து பகிர்ந்துள்ளார்!

60
0

Trisha: லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ, தளபதி விஜய்யின் கேரியரில் அதிகம் பேசப்பட்ட படங்களில் ஒன்று. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் காஷ்மீரில் படக்குழுவினர் ஒரு செடியுலில் கடினமான சூழ்நிலையில் படப்பிடிப்பை முடித்தனர். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கும் என்று ஏற்கனவே செய்திகள் வந்துள்ளது. தற்போது படத்தின் நாயகி த்ரிஷா செட்களில் இருந்து தனது இன்ஸ்டாகிராமில் ஒரு BTS படத்தைப் பகிர்ந்து கொண்டார், மேலும் அதில் “பேஸ் டு பேஸ்” என்று கூல் ஃபேஸ் எமோஜியுடன் தலைப்பிட்டு வெளியிட்டார்.

ALSO READ  New Movies: OTT மற்றும் திரையரங்குகளிள் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள்

Also Read: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘தலைவர் 171’ படத்திற்காக லோகேஷ் கனகராஜை சந்திக்க உள்ளார்

படக்குழு கிட்டத்தட்ட 50 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ளது. முழுப் படத்தை முடிக்க இன்னும் 60 நாட்கள் படப்பிடிப்பு பாக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் மற்றும் த்ரிஷாவைத் தவிர, சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் மன்சூர் அலி கான் ஆகியோர் சென்னை ஷெட்யூலில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டிக்கு செல்லவுள்ளது.

ALSO READ  Suriya: ஷங்கர் இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா

Trisha: லியோ படத்தின் பற்றிய ஒரு ஹாட் அப்டேட்டை த்ரிஷா செட்டில் இருந்து பகிர்ந்துள்ளார்!

லியோ படத்தில் தொழில்நுட்பக் குழுவில் அனிருத் இசையமைப்பாளராகவும், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராகவும், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராகவும், அன்பரிவ் ஸ்டண்ட் மாஸ்டராகவும், தினேஷ் நடன இயக்குனராக கவனிக்கிறார்கள். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

Leave a Reply