Home Cinema News Varisu teaser release update: விஜய்யின் வாரிசு படத்தின் டீசர் இந்த நேரத்தில் வெளியாகும்

Varisu teaser release update: விஜய்யின் வாரிசு படத்தின் டீசர் இந்த நேரத்தில் வெளியாகும்

61
0

Varisu teaser: தளபதி விஜய் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் படம் 2023 பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியிட தயாராகி வருகிறது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் தீவிரப்படுத்த தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி முதல் சிங்கிள் ப்ரோமோ சமீபத்தில் வெளியிடப்பட்டது.

Also Read: பிக் பாஸ் தமிழ் S6 ஐந்தாம் வாரம் எலிமினேஷனுக்கு ஆபத்து நிலையில் மூன்று போட்டியாளர்கள்

ரஞ்சிதாமே பாடல் தற்போது யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் உள்ளது மற்றும் இரண்டாவது சிங்கிள் எப்போ வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்போது லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், இந்த படத்தின் டீஸர் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது. மேலும் இரண்டாவது சிங்கிள் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது. வதந்திகள் உண்மை என்றால் வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை அனிருத் ரவிச்சந்தர் பாடுவார் என்று தெரிகிறது. கத்தி, மாஸ்டர், பிஸ்ட போன்ற படங்களில் விஜய்க்காக பாடி அனிருத் இசையமைத்துள்ளார். அவர் இசையமைக்காத விஜய் படத்துக்கு பாடுவது இதுவே முதல் முறை.

ALSO READ  Kaduva: பிருத்விராஜின் கடுவா திரைப்படம் OTT வெளியீட்டு தேதி இதோ

Varisu teaser release update: விஜய்யின் வாரிசு படத்தின் டீசர் இந்த நேரத்தில் வெளியாகும்

வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‘வாரிசு’. ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும் இப்படத்தில் காதல், நகைச்சுவை, ஆக்ஷன், சென்டிமென்ட் மற்றும் உணர்ச்சிகள் நிறைந்திருக்கும் என்று தெரிகிறது. மேலும் இதில் பிரபு, யோகி பாபு, பிரகாஷ் ராஜ், ஷாம், குஷ்பு, மீனா, சங்கீதா மற்றும் ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Leave a Reply