Home Cinema News VJS: விஜய் சேதுபதியின் புதிய படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக அறிவிக்கப்பட்டது

VJS: விஜய் சேதுபதியின் புதிய படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக அறிவிக்கப்பட்டது

167
0

VJS: நடிகர் விஜய் சேதுபதி lமுன்னணி ஹீரோக்களின் பட்டியலில், ஒரு வருடத்தில் அதிக படங்கள் வெளியாகி சாதனை படைத்தவர். இருப்பினும் அவரது படங்களில் ஒன்றான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கொரோனா வைரஸ் தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மிக நீண்ட தாமதத்தைக் கண்டது. ரசிகர்களுக்கு இப்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் திரையரங்கு உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி கைப்பற்றிது. இம் மாதம் மே 19, ஆம் தேதி அன்று ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன, மேலும் படத்தின் ஆடியோவை இன்று மாலை 6 மணிக்கு உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிடுகிறார்.

ALSO READ  Thalaivar 171: ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்திற்கு பாலிவுட் ஸ்டார் ஹீரோ இறுதியா?

VJS: விஜய் சேதுபதியின் புதிய படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக அறிவிக்கப்பட்டது

வெங்கடகிருஷ்ண ரோகந்த் இயக்கிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, சந்தாரா ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் மேகா ஆகாஷ் ஜோடியாக மகிழ் திருமேனி, மோகன்ராஜா, கனிஹா, ரித்விகா, கரு பழனியப்பன், சின்னி ஜெயந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். மறைந்த நடிகர் விவேக் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் மற்றும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ தவிர அவரது இறுதிப் படங்களில் இதுவும் ஒன்றாகும்.

Leave a Reply