Viral: KGF வெளியீடு பிறகு ராக்கிங் ஸ்டார் யாஷின் அடுத்த படம் குறித்த சஸ்பென்ஸ் இன்னும் நீடிக்கிறது. கடந்த சில நாட்களாக, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் ஒரு பெரிய படத்தில் யாஷ் அடுத்ததாக நடிக்க இருப்பதாக சமூக ஊடகங்களில் ஒரு கிசுகிசு பரவி வருகிறது.
தற்போது இத்திரைப்படம் பிரபல தமிழ் நாவலான வேள்பாரியின் தழுவல் என்று இணையத்தில் மற்றொரு வதந்தி பரவி வருகிறது. இந்நிலையில் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், ரூ. 1000 கோடி மிகப்பெரிய பட்ஜெட் படத்தை, பென் மூவீஸ், கரண் ஜோஹர் மற்றும் நெட்ஃபிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த பெரிய படத்தை பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிக்க உள்து என்றா தகவல் வைரலாகி வருகிறது. இந்த வதந்திகள் உண்மை என்றால், அது நிச்சயம் பரபரப்பை ஏற்படுத்தப் போகிறது.
Also Read: கணவர் விக்னேஷ் சிவன் 37 வது பிறந்தநாளை புர்ஜ் கலிஃபாவின் கீழே கொண்டாடிய நயன்தாரா
மறுபுறம் யாஷ் KGF வெளியீடு பிறகு அவர் ஏத்த படம் அறிவிப்பார் மற்றும் இயக்குனர் யார் என்ற தகவல் தெரிந்து கொள்ள அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதிகாரபூர்வ தகவல் வரும் வரை காத்திருப்போம்.