Home Cinema News VV 21: ‘ராட்சசன்’ குழு மீண்டும் இணைவதை உறுதி செய்த முன்னணி தயாரிப்பு நிறுவனம்.!

VV 21: ‘ராட்சசன்’ குழு மீண்டும் இணைவதை உறுதி செய்த முன்னணி தயாரிப்பு நிறுவனம்.!

69
0

VV 21: ராம்குமார் இயக்கிய 2018 ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான ‘ராட்சசன்’ என்ற சைக்கோ த்ரில்லர் படம் சிறந்த வரவேற்ப்பை பெற்றது மற்றும் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத சிறந்த திரில்லர் படங்களில் ஒன்றாகப் பாராட்டப்பட்டது. அதன் வெற்றிக்குப் பிறகு ராம்குமார், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு பெரிய படத்தில் தனுஷை இயக்க ஒப்பந்தம் செய்தார். அனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் சில காரணங்களால் அந்த திட்டம் நிறுத்தபட்டது.

ALSO READ  DD3: தனுஷின் 'DD3' படத்தில் இரண்டு பிரபல மலையாள நட்சத்திரங்கள் இணைகிறார்களா?

VV 21: 'ராட்சசன்' குழு மீண்டும் இணைவதை உறுதி செய்த முன்னணி தயாரிப்பு நிறுவனம்.!

கடந்த ஐந்து வருடங்களாக எந்தப் படமும் செய்யாமல் இருந்த ராம்குமார், தொடர்ந்து மூன்றாவது முறையாக விஷ்ணு விஷாலுடன் மீண்டும் இணையவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இப்போது சத்யஜோதி பிலிம்ஸ் அதையே ட்விட்டரில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது, “முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ படங்களுக்குப் பிறகு அவரது 3வது படத்தை காண தயாராகுங்கள், விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமாரின் பிளாக்பஸ்டர் காம்போ மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது. விஷ்ணு விஷாலின் விவி 21 என்ற பெயரில் உருவாகும் இப்படம் காதல் கலந்த திரில்லர் படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply