Home Cinema News Leo: தளபதி விஜயின் லியோ திரைப்படம் அமெரிக்காவில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

Leo: தளபதி விஜயின் லியோ திரைப்படம் அமெரிக்காவில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

58
0

Leo: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேங்ஸ்டர் திரைப்படம், ‘லியோ’. இப்படம் 2023 ஆம் ஆண்டில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாகும். இதன் படப்பிடிப்பு வேகமாக முடிவடையும் தருவாயிlல் உள்ளது, மேலும் படம் ரசிகர்களுக்கு தீபாவளி பண்டிகை விருந்தாக அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் லியோவின் வெளியீட்டுத் திட்டங்கள் குறித்த மிகப்பெரிய அப்டேட் இங்கே உள்ளது.

ALSO READ  Thalapathy 67 Official: விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் முதல் கோஸ்டார் அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டது

லியோவின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்எஸ் லலித் குமார் சமீபத்திய நேர்காணலில் லியோவை அமெரிக்கா உள்ள 3,000 க்கும் மேற்பட்ட திரைகளில் மற்றும் கனடாவில் 1,500 திரைகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். வட அமெரிக்கா பகுதிகளில் எந்த ஒரு தென்னிந்தியப் படத்துக்கும் இது நிச்சயம் மிகப்பெரிய அளவிலான வெளியிடு என்று கருதப்படுகிறது.

ALSO READ  Varalaru Mukkiyam trailer out: ஜீவாவின் புதிய படம் வரலாறு முக்கியம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

Leo: தளபதி விஜயின் லியோ திரைப்படம் அமெரிக்காவில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

வெளி நாடுகளில் சிறப்பாகச் சென்றடைவதற்காக லியோவை ஆங்கிலத்தில் டப்பிங் செய்ய முதலில் குழு திட்டமிட்டிருந்ததை லலித் குமார் வெளிப்படுத்தினார். இருப்பினும், நேரமின்மை காரணமாக திட்டம் கைவிடப்பட்டது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரிஷா, அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Leave a Reply