Home Cinema News Shocking! ‘தளபதி 68’ படத்திற்க்கு பின் மூன்று வருடங்கள் நடிப்பில் இருந்து விலகுவாரா விஜய்?

Shocking! ‘தளபதி 68’ படத்திற்க்கு பின் மூன்று வருடங்கள் நடிப்பில் இருந்து விலகுவாரா விஜய்?

78
0

Vijay: ஜூன் 17 ஆம் தேதி, தளபதி விஜய் தனது ஸ்கூல் டாப்பர்ஸ் மீட்க்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் உள்ள இளம் சாதனையாளர்களை அவர்களது பெற்றோருடன் அழைத்து பதக்கம் மட்டுமின்றி ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவித்தார்.

இந்த நிகழ்வு விஜய்யின் அரசியல் பிரவேசத்தின் ஆரம்பம் என்று கூறப்படுகிறது. மே 2024 இல் இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது அல்லது 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் அரசியலில் களமிரங்குவார் என்று ஆய்வாளர்கள் ஏற்கனவே விவாதித்து வருகின்றனர். இப்போது சில தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ‘தளபதி 68’ படத்திற்கு பிறகு மூன்று வருடங்கள் நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்து விஜய் அரசியலில் கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது.Shocking! 'தளபதி 68' படத்திற்க்கு பின் மூன்று வருடங்கள் நடிப்பில் இருந்து விலகுவாரா விஜய்?

ALSO READ  Varisu 1st single: விஜய்யின் 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிள் இந்த நாளில் வெளியாகுமா!

தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார், இது அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அவர் மூன்று மாதங்கள் விடுமுறை எடுத்து வெங்கட் பிரபுவின் ‘தளபதி 68’ படத்தின் செட்டில் அக்டோபர் முதல் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் 2024 தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜூன் அல்லது ஜூலைக்குள் விஜய்யின் பகுதிகள் முடிந்த பிறகு கட்சிப் பணிகளில் அவர் முழுமையாக ஈடுபடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ  Indian 2: இந்தியன் 2 படத்திற்கு பாலிவுட் டாப் ஹீரோயின்

மற்ற அறிக்கைகள் விஜய்யின் ‘தளபதி 69’ ஆவது படத்தை இயக்குனர் அட்லி இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்று கூறுகின்றன. ஆனால், ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகவில்லை என்றும், விஜய் இவ்வளவு நாள் இடைவெளி எடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுப்பாரா என்பதும் காலம்தான் சொல்லும் என்றும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply