Home Cinema News Official: தளபதி 67 படத்தின் புரோமோ வீடியோவுடன் வெளியான அதிகாரபூர்வ தலைப்பு

Official: தளபதி 67 படத்தின் புரோமோ வீடியோவுடன் வெளியான அதிகாரபூர்வ தலைப்பு

87
0

LEO: தளபதி விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்து கொண்டிருந்த தருணம் வந்துவிட்டது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 67’ படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதி, ப்ரோமோவுடன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மூன்று நிமிடம் வரை இருக்கும் இந்த வீடியோ தளபதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

தளபதி 67 படத்திற்கு ‘லியோ’ (Leo) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் டீஸரில் விஜய் சாக்லேட் காய்ச்சுவதையும், கத்தியால் வெட்டுவதையும் காட்டுகிறது, அதே நேரத்தில் கொலையாளிகள் குழு அவரை வேட்டையாடச் செல்கிறது. அனிருத்தின் இசையில் விஜய்யின் கவர்ச்சி மற்றும் லோகேஷின் மேக்கிங் ஆகிய மூன்றும் விஷயங்கள் ரசிக்கும்படியாக உள்ளது. இந்த படத்தின் வெளியீட்டுத் தேதி – 19 அக்டோபர் 2023, ஆயுத பூஜை விடுமுறை முன்னிட்டு வெளியிடவுள்ளனர்.

ALSO READ  Suriya: சூர்யா-41 படத்துக்கு ‘வணங்கான்’ என்று தலைப்பு - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

ப்ரோமோவின் முடிவில், நெருப்பில் வைத்து சிவப்பு நிறம் மாறிய சூடான வாளை எடுத்து புதிய சாக்லேட்டில் நனைக்கிறார் விஜய். அவர் அதை சுவைத்து, “ப்ளடி ஸ்வீட்” என்ற டயலாக்கை உச்சரித்த பின் ‘லியோ’ என்ற தலைப்பு வெளியாகிறது. தளபதி விஜய், சஞ்சய் தத், த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மேத்யூ தாமஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். லலித் குமாரின் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோவால் தயாரிக்கப்பட்டுள்ள லியோவின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், எடிட்டராக பிலோமின் ராஜ்ஜும், ஸ்டண்ட் நடன இயக்குனராக அன்பரிவ் மாஸ்டர், கலை இயக்குநராக சதீஸ் குமார், நடன இயக்குனராக தினேஷ். இயக்குனர்கள் ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் திரைக்கதைக்காக லோகேஷ் உடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.

Leave a Reply