Home Cinema News தளபதி 66 படத்தில் ரஷ்மிகாவின் கதாபாத்திரம் என்ன?

தளபதி 66 படத்தில் ரஷ்மிகாவின் கதாபாத்திரம் என்ன?

52
0

தளபதி 66 படத்தில் ரஷ்மிகா மந்தானவின் கதாபாத்திரம் பற்றி வெளியான சுவாரஸ்யமான தகவல். 

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்கான தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் 66 படத்தில் கமிட்டாகியுள்ளர்

வம்சி இயக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தான முதல் முறையாக நடிக்கிறார். மேலும் சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ் ராஜ், பிரபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ALSO READ  Hot update: விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் பற்றி கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் உற்சாகமான அப்டேட்

படத்தின் கதை

தமன் இசையமைக்கும் இந்த தளபதி 66 படத்தின் ஷூட்டிங் ஹைதராபாதில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் கதை வித்தியாசமாகவும் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் படி இருக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு விஜய் இந்த படத்தில் வெறோரு கோணத்தில் நடிப்பதாகவும் படத்தின் கதை வித்தியாசமாகவும் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

ரஷ்மிகா கதாபாத்திரம்

இந்த நிலையில் இதுவரைக்கும் துறுதுறுவென கியூட் பெண்ணாக நடித்து கொண்டு இருந்த ரஷ்மிக மாந்தான தற்போது விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் தளபதி 66 படத்தில் கோபமான பெண்ணாகவும் தலைகனம் கொண்ட பெண்ணாக நடிக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.

ALSO READ  Kollywood: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் யாஷ் இணையும் பிரம்மாண்ட திரைப்படம்

மேலும் ஹைதராபாதில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். தளபதி 66 படத்தை விரைவில் முடித்துவிட்டு அடுத்தாண்டு பொங்கல் தினத்தன்று படத்தை திரையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

 

 

Leave a Reply