Home Cinema News Vaathi: தனுஷின் வாத்தி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது

Vaathi: தனுஷின் வாத்தி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது

55
0

Vaathi: தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் டீஸர், தனுஷ் பிறந்த நாளான இன்று பட குழுவினர் வெளியிட்டனர்.

இப்படத்தில் தனுஷ் நேர்மையான ஆசிரியராக நடித்துள்ளார், மேலும் இந்த படம் கல்வியை வணிகமாக பயன்படுத்துவதை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது. டீஸரில் சுப்பிரமணிய பாரதியின் உடையில் நடிகர் தனுஷ் வருகிறார்.

Also Read: AK: பல வருடங்களுக்குப் பிறகு ரசிகர்களை நேரில் சந்தித்த அஜித்

ALSO READ  Maaveeran: சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் டிக்கெட் முன்பதிவு எப்போது?

நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர், அதில் தனுஷ் ஒரு நாற்காலியில் அமர்ந்து, அவர் ஏதோ எழுதுவது போல் தோற்றமளிக்கிறது. தனுஷ் பிறந்த நாளான இன்று வாத்தி படத்தின் டீஸர் பட குழுவினர் வெளியிட்டனர். இந்த படம் தமிழ் – தெலுங்கு மொழிகளில் படமாக திட்டமிடப்பட்டுள்ளது. தெலுங்கில் சர் என்று பெயரிடப்பட்டுள்ளது இப்படத்தில் மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நாயகியாக நடிக்கிறார்.

ALSO READ  Vijay: தளபதி 67 படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா

Vaathi: தனுஷின் வாத்தி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது

வாத்தியில் சாய் குமார் மற்றும் மூத்த நடிகர் தணிகல பரணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு யுவராஜ், படத்தொகுப்பு நவின் நூலி, ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி உள்ளது. இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகியவற்றின் கீழ் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து தயாரித்துள்ளனர்.

Leave a Reply