Tamannaah: தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த தமன்னா, பாகுபலி படத்தின் மூலம் உலக அளவில் மிக பிரபலமான நடிகையானர். தற்போது தமன்னா ஹிந்தி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஹாட் செய்தி என்னவென்றால் இந்தி நடிகர் விஜய் வர்மாவும் தமன்னாவும் காதலிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
Also Raed: துணிவு VS வாரிசு முதல் நாள் மோதல் இல்லையா?
புத்தாண்டை கொண்டாட இருவரும் கோவா சென்றுள்ளனர். அங்கு தமன்னா விஜய் வர்மாவை கட்டிப்பிடித்து உதட்டில் முத்தமிடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இருவரும் காதலிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த முத்த வீடியோவை திரையுலகம் மற்றும் ரசிகர்கள் பேசி வருகின்றனர். விஜய் வர்மா 2012 ஆம் ஆண்டு ‘சிட்டகாங்’ படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் அவர் பிங்க், மான்சூன் ஷூட் அவுட், மாண்டோ, கல்லிபாய், பேய் கதைகள் மற்றும் ஆந்தாலஜி ஆகியவற்றில் புகழ் பெற்றார்.
2022 இல், அவர் அர்த்தங்க் மற்றும் டார்லிங் படங்களில் நடித்தார். தற்போது கரீனா கபூர் கைதிப் அஹ்லாபத்துடன் இணைந்து ‘தி டெவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நயன்தாரா மற்றும் ஹன்சிகா கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த ஆண்டு விஜய் வர்மாவுடன் தமன்னா திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.