Home Cinema News Suriya 42: சூர்யா 42 பூஜை தேதி அறிவிப்பு – இரண்டு பாகங்களாக பிரமாண்டமாக உருவாகவுள்ளது

Suriya 42: சூர்யா 42 பூஜை தேதி அறிவிப்பு – இரண்டு பாகங்களாக பிரமாண்டமாக உருவாகவுள்ளது

76
0

Suriya 42: சூர்யா சமீபத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார் மற்றும் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் அவர் கேமியோ ரோலில் நடித்து அசத்தினார். தற்போது நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவின் ‘வணங்கான்’, இயக்குனர் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் பெயரிடப்படாத படத்தில் நடிக்க உள்ளது.

Also Read: கார்த்தியின் விருமன் படம் இந்த OTT-யில் வர உள்ளது

சில நாட்களுக்கு முன்பு, சூர்யா ‘வணங்கான்’ படத்தை நிறுத்தி வைத்துள்ளதாகவும், இயக்குனர் பாலாவுடன் பழைய படத்தை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு சிறுத்தை சிவாவுடன் ‘சூர்யா 42’ தொடங்குவார் என்றும் நாங்கள் உங்களுக்கு அறிவித்தோம். இந்நிலையில் தற்போது சூர்யாவின் ஷெட்யூல் பற்றிய சூடான அறிவிப்புகள் வந்துள்ளது.

ALSO READ  Liger trailer: விஜய் தேவரகொண்டாவின் 75 அடி பிரமாண்ட லைகர் கட்அவுட்

Suriya 42: சூர்யா 42 பூஜை தேதி அறிவிப்பு - இரண்டு பாகங்களாக பிரமாண்டமாக உருவாகவுள்ளது

‘சூர்யா 42’ படத்தின் பூஜை விழா ஆகஸ்ட் 21ஆம் தேதி சூர்யா மற்றும் சிறுத்தை சிவாவுடன் நடைபெறவுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், படப்பிடிப்பு ஆகஸ்ட் 22ஆம் தேதி (பூஜைக்கு மறுநாள்) தொடங்குகிறது. தயாரிப்பாளர்கள் முதல் ஷெட்யூலை ஒரு மாதத்திற்கும் மேலாக திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் செப்டம்பர் இறுதியில் மீண்டும் ‘வணங்கன்’ படப்பிடிப்பில் சூர்யா இணையவுள்ளார் என்று தெறிகிறது.

ALSO READ  Suriya: பிரபல இயக்குனரின் அடுத்த படத்துடன் சூர்யாவின் பெரிய பாலிவுட் அறிமுகம்?

Also Read: ஸ்பெயின் விடுமுறையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் – வைரலாகும் புகைப்படங்கள்

படக்குழுவினர் நடிகர்கள் மற்றும் குழுவினரை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரங்களுடன் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சூர்யா 42’ திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரமாண்டமாக உருவாகவுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திட்டம் குறித்த கூடுதல் அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்.

Leave a Reply