Home Cinema News Suriya: சூர்யா 42 படம் பிரமாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது

Suriya: சூர்யா 42 படம் பிரமாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது

71
0

Suriya 42: இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் கோலிவுட் நட்சத்திர நடிகர் சூர்யா நடிக்கும் படம் மீண்டும் இன்று தலைப்புச் செய்தியாகியுள்ளது. சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம், பிரமாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. சூர்யா தற்போது வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் மற்றும் பாலா இயக்கும் வணங்கான், ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது அந்த இரு படங்களின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சிவா இயக்கவுள்ள படத்தின் சூட்டிங்கில் சூர்யா பங்கேற்க இருக்கிறார்.

ALSO READ  Jailer: ஜெயிலர் கதை விவாதத்தில் கலந்து கொண்ட ரஜினி - வியந்து போன படக்குழு!

Also Read: சூர்யாவின் ஜெய் பீம் சீனாவில் திரையிடப்பட்டது – கண்கலங்கயா சீன மக்கள் வைரல் வீடியோ

சென்னை ராமாபுரத்தில் உள்ள அகரம் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பூஜை விழாவில் நடிகர் சூர்யா, இயக்குநர் சிவா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இயக்குனர் சிவா இயக்கிய அண்ணாத்த கலவையான விமர்சனம் பெற்ற நிலையில், தற்போது சூர்யாவுடன் இணைகிறார்.

ALSO READ  Danush viral video: வாத்தி படத்தின் முதல் பாடலை தனுஷ் பாடும் வைரல் வீடியோ

Suriya: சூர்யா 42 படம் பிரமாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது

யுவி கிரியேஷன் தயாரிப்பில் 2 பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். KE ஞானவேல்ராஜா, விக்ரம் மற்றும் வம்சி தயாரிக்கும் இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Leave a Reply