Le Musk: தமிழ் சினிமாவில் பல வெற்றிபடங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமானவர் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பதில் சந்தேகமில்லை. 80 துகளில் இருந்து தற்போது உள்ள காலகட்டம் வரை ரஜினி படம் என்றாலே மாஸ் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்திய சினிமாவில் முன்னணி இசை நாயகனாக வளம் வந்து கொண்டிருக்கும் ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் படங்களை இயகுவதிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது லீ மஸ்க்’ என்ற படத்தை அவரே தயாரித்து இயக்கியுள்ளார்.
தற்போது ரகுமான் ரஜினி லீ மஸ்க் படத்தை விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் பார்க்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்தியாவில் முதன்முதலாக விர்ச்சுவல் ரியாலிட்டி முயற்சியில் எடுக்கப்பட்ட படம் இது என்று கூறிவருகின்றனர். அதோடு VR ஹெட்செட் மூலம் தலைவரின் படங்கள் பார்த்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது பிரமிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
‘லே மஸ்க்’ என்பது மெய்நிகர் யதார்த்தத்தை உள்ளடக்கிய ஒரு சினிமா உணர்வு அனுபவமாகும், 36 நிமிடம் ஓடும் இப்படம் விர்ச்சுவல் ரியாலிட்டி என்ற புதிய தொழில்நுட்ப்பத்தை கொண்டு தயாரிக்கபட்டது. இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டுகளிக்கும் காட்சியை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் ஏ.ஆர் ரகுமான். படத்தின் பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. திரைப்படத்தை கான பிரிதியோக கண்ணாடி கொடுக்கப்படுகிறது. அதோடு பார்வையாளர்கள் அமரும் நாற்காலியும் திரைப்படத்திற்கு ஏற்ற அசைவுகளை தருகிறது இதனால் பார்வையாளர்கள் படதிற்குள் சென்றது போன்ற அனுபவத்தை உணர்கின்றனர்.