Home Cinema News Sudha Kongara: மணிரத்னம், சூர்யா மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோருடன் சுதா கொங்கரா – வைரல் புகைப்படங்கள்

Sudha Kongara: மணிரத்னம், சூர்யா மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோருடன் சுதா கொங்கரா – வைரல் புகைப்படங்கள்

25
0

Sudha Kongara: சுதா கொங்கரா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகில் முன்னனி பெண் இயக்குனராக இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்றார். இன்று, இயக்குனர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், அவர் புதிய ஆடி கார் வாங்கியதை பகிர்ந்து கொண்டார்.

Also Read: பிக் பாஸ் தமிழ் 6-யில் இந்த வாரம் ஓப்பன் நாமினேஷன் சூடுபிடிக்கிறது

இது தான் தனது முதல் கார் என்றும், தனக்குப் பிடித்தமான இயக்குனர் மணிரத்னம், சூர்யா மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோருடன் அதைக் கொண்டாடியதாகவும் கூறினார் இயக்குனர் சுதா கொங்கரா. இவர் கடந்த காலங்களில் இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த சூரரைப் போற்று படத்தில் சூர்யாவை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களுடன் சில புகைப்படங்களை சுதா கொங்கரா வெளியிட்டுள்ளார். ஒரு படத்தில் சூர்யா தனது புதிய காரை ஓட்டிக் கொண்டிருந்தார், மற்றொரு படத்தில் சுதா மணிரத்னத்துடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார். “எனக்கு பிடித்த நபர்களுடன் எனது முதல் காரில் செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்! புகைப்படத்துடன் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார். தற்போது இந்த புகைப்படம் வைரலகி வருகிறது.

Leave a Reply