Home Cinema News Thalapathy 67: விஜய்க்கு வில்லியாக நடிக்கும் ஸ்டார் ஹீரோயின் – அப்போ ஜோடி யாரு?

Thalapathy 67: விஜய்க்கு வில்லியாக நடிக்கும் ஸ்டார் ஹீரோயின் – அப்போ ஜோடி யாரு?

37
0

Thalapathy 67: தமிழ் சினிமாவில் யங் டைரெக்டர் ஆன லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் கார்த்திக் நடித்த கைதி, விஜய் நடித்த மாஸ்டர், கமல் நடித்த விக்ரம் படம் இவரது இயக்கத்தில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. கமல் நடித்த விக்ரம் படம் தமிழ் சினிமாவில் பாகுபாலி வசூல் சாதனையை முறியடித்தது. மக்கள் மத்தியில் விக்ரம் படம் பெருமளவு பேசப்பட்டு வருகிறது. விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 படத்தை இயக்க போவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.

Also Read: Vijay: வாரிசு படம் ரிலீஸ் முன்பே ரூ.200 கோடி வசூல் – விஜய் புதிய சாதனை

தற்போது தளபதி விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். ரஷ்க்மிகா மந்தானா ஹீரோயினாக நடிக்கிறார். விஜயின் வாரிசு படத்தை விட லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் இணையும் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு தான் ரசிகர்களுக்கு அதிகமாக உள்ளது. இந்த படத்துக்காக முதன்மை கட்ட பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்ராம். அதோடு செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்க போகிறார் என்ற தகவல் மட்டும் தற்போது உறுதியாகியுள்ளது.

ALSO READ  GVM: ‘வேட்டையாடு விளையாடு 2’ இந்தத் தேதியில் தொடங்கும் - தயார் நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன்

Thalapathy 67: விஜய்க்கு வில்லியாக நடிக்கும் ஸ்டார் ஹீரோயின் - அப்போ ஜோடி யாரு?

இந்த நிலையில் நடிகை சமந்தா தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஹீரோயின் சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டா படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி விஜய்யின் 67வது படத்தில் சமந்தா நடிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read: Ileana D’Cruz: ஸ்டார் ஹீரோயின் சகோதரருடன் இலியானா டேட்டிங்

ஆனால் இந்த படத்தில் நெகடிவ் ரோலில் நடிக்கிறார் சமந்தா. இப்படம் கேங்ஸ்டர் படமாக உருவாகிறது என கூறப்படுகிறது. ஏற்கனவே சமந்தா தி ஃபேமிலி மேன் 2 இல் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினார், புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற படலுகும் நடனமாடி அசத்தியிருக்கிறார் சமந்தா. தற்போது விஜய்க்கு வில்லியாக நடிக்கிறார் என்ற தகவல் சமந்தா ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். சமந்தாவின் யசோதா மற்றும் சகுந்தலம் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் நிலையில் இருக்கிறது.

ALSO READ  Rajinikanth: ஜெயிலர் படத்தில் நடிக்க இருக்கும் ரஜினியை விட 40 வயது இளைய டாப் ஹீரோயின்

Thalapathy 67: விஜய்க்கு வில்லியாக நடிக்கும் ஸ்டார் ஹீரோயின் - அப்போ ஜோடி யாரு?

ஏற்கனவே தளபதி விஜய்யுடன் இணைந்து தெறி படத்தில் ஜோடியாக நடித்த சமந்தா இந்த படத்தில் விஜயுடன் வில்லியாக மோதினால் படம் இந்தியாவில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று லோகேஷ் கனகராஜ் எண்ணுகிறார். வில்லி சமாந்தா அப்போ விஜய்க்கு ஜோடி யாரு என்று பார்த்தால் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த டான் படத்தின் கதாநாயகி இந்த படத்தில் விஜயுடன் ஜோடி சேர இருக்கிறார் என்ற தகவலும் உலவருகிறது.

Leave a Reply