Home Cinema News Chiyaan 62: சியான் விக்ரமின் ‘சியான் 62’ படத்தின் நட்சத்திர பட்டியலில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா

Chiyaan 62: சியான் விக்ரமின் ‘சியான் 62’ படத்தின் நட்சத்திர பட்டியலில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா

33
0

Chiyaan 62: சீயான் விக்ரம் நடிப்பில் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸுக்கு தயாராகி வரும் ‘தங்கலான்’ மற்றும் ‘துருவ நட்சத்திரம்’ போன்ற நம்பிக்கைக்குரிய படங்கள் உள்ளன. முன்னதாக அவர் தனது அடுத்த படமான ‘சியான் 62’க்காக புகழ்பெற்ற இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் மற்றும் எச்.ஆர்.பிக்சர்ஸ் ஆகியோருடன் இணைந்தார். இந்த படம் சில மாதங்களுக்கு முன்பு ஒரு சிறப்பு பார்வையுடன் அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

‘சியான் 62’ படத்தின் புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா படத்தின் நட்சத்திர பட்டாளத்தில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இரு அட்டகாசமான நடிகர்கள் படத்தில் இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் “சியானின் 62 படத்தில் ஆற்றல்மிக்க குழுவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் சார்” என்று தயாரிப்பு நிறுவனம் பதிவிட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த எஸ்.ஜே.சூர்யா, “சியானின் 62 -ல் இணைந்ததில் மகிழ்ச்சி. @gvprakash sir-வுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி & @HRPictures தயாரிப்பாளர்கள் @riyashibu_ , @shibuthameens sir மற்றும் குழுவிற்கு நன்றி” (sic). இந்த செய்தகி தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply