Home Cinema News Amaran: சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ திரைப்படம் பண்டிகை நேரத்தில் வெளியீட்டிற்கு தயாராகிறது

Amaran: சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ திரைப்படம் பண்டிகை நேரத்தில் வெளியீட்டிற்கு தயாராகிறது

45
0

Amaran: சிவகார்த்திகேயனின் கேரியரில் ‘அமரன்‘ மிகப்பெரிய ஆக்‌ஷன் படமாக இருக்கும். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இந்தப் படத்தில் அவர் டைட்டில் ரோலில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சமீபத்திய தகவல்களின்படி சில நாட்களில் SK இன் பகுதிகளை முடிக்க குழு திட்டமிட்டுள்ளது.

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 6 ஆம் தேதி மிகப்பெரிய பெரிய திரைக்கு கொண்டு வருகின்றனர் படக்குழுவினர். ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்கு நாம் காத்திருக்க வேண்டும். ‘ரங்கூன்’ புகழ் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கியிருக்கும் ‘அமரன்’ படத்தில் சாய் பல்லவி, ராகுல் போஸ் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

ALSO READ  Kanam trailer now official: கணம் ட்ரைலரை அனிருத் வெளியிட்டுள்ளார்

Amaran: சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' திரைப்படம் பண்டிகை நேரத்தில் வெளியீட்டிற்கு தயாராகிறது

மறுபுறம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘SK 23’ படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு வெங்கட் பிரபுவுடன் இணைந்து பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கோபுரம் பிலிம்ஸின் கீழ் தனுஷுடன் ஒரு படத்தில் ராஜ்குமார் பெரியசாமி ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ இயக்குனர் சிதம்பரம் முதலில் தனுஷை வைத்து படம் பண்ண பேச்சு வார்த்தை நடந்து வந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply