Home Cinema News STR 48: STR 48’படத்திற்காக சிம்புவின் அற்புதமான கெட்டப் – கமல் உடனான சமீபத்திய புகைப்படங்கள்...

STR 48: STR 48’படத்திற்காக சிம்புவின் அற்புதமான கெட்டப் – கமல் உடனான சமீபத்திய புகைப்படங்கள் வைரல்

57
0

STR 48: தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து தனது ‘எஸ்டிஆர்48’ படத்தில் சிம்பு நடிக்கிறார் என்ற ஆச்சரியமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்தது. இப்படத்தில் நடிப்பதற்காக சிறப்பு தற்காப்புக் கலைப் பயிற்சிக்காக சிம்பு தாய்லாந்திற்குச் சென்ற நிலையில், படத்தை பற்றின அடுத்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் இப்போது சிம்பு, கமல் மற்றும் தேசிங்க்கு பெரியசாமியின் சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுக் காவியமான ஆக்‌ஷன் படம் என்பதால் தற்போது விரிவான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக தேசிங் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

ALSO READ  PS1-1 Box office collection: பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிஸ் 6-வது நாள் வசூல்

STR 48: STR 48'படத்திற்காக சிம்புவின் அற்புதமான கெட்டப் - கமல் உடனான சமீபத்திய புகைப்படங்கள் வைரல்

நடிகர் சிம்பு இப்படத்தில் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடிப்பதாகவும், அதற்காக அதிக போர் பயிற்சிக்காக லண்டன் சென்றுள்ளதாகவும் பகிர்ந்துள்ளார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. சிம்பு நடிக்கும் ‘STR 48’ திரைப்படம் ராஜ் கமல் ஃபில்ம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 56வது தயாரிப்பபில் பிரமாண்டமாக உருவாகிறது. இப்படம் சிம்புவின் கேரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது. படத்தின் படபிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளனர்.

Leave a Reply