Home Cinema News Simbu: வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய மாஸ் அப்டேட்

Simbu: வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய மாஸ் அப்டேட்

9
0

Simbu: சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் புதிய மாஸ் அப்டேட் படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்.

simbu

சிம்பு மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். கெளதம் மேனன் கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மூன்றாவது முறையாக ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் நடிப்பதால். ரசிகர்கள் வெறித்தனமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள்.

தறப்போது கெளதம் மேனன். வருண் நடிப்பில் ‘ஜோஷ்வா’ படத்தை இயக்கி முடித்துள்ளார், இதனை தொடர்ந்து அடுத்த படம் சிம்பு நடிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை கெளதம் மேனன் இயக்கி வருகிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் இந்த இரண்டு படங்களையுமே  தயாரித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் மூன்றாவது முறையாக சிம்பு, கெளதம் மேனன் வற்றி கூட்டணியாக இசையமைக்கவுள்ளார். 

வெந்து தணிந்தது காடு இந்த படத்திற்கு ஆரம்பத்தில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற பெயர் வைத்திருந்தார்கள். அதன்பிறகுதான் படத்தின் தலைப்பை மாற்றி பாரதியாரின் கவிதை வரிகளான ‘வெந்து தணிந்தது காடு’ என்ற தலைப்பில் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியிட்டார்கள். சிம்புவின் லுக் ரசிகர்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

atr

சிம்பு ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் முத்து என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  திருச்செந்தூரில் இதன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடித்து பின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. தற்போது இந்தப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் இடையில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜனவரி 3 ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக திரைப்படக்குழுவினர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் சிம்புவின் ஜோடியாக சித்தி இட்னானி நடித்து வருகிறார், இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சித்தி இட்னானி தெலுங்கு மற்றும் குஜராத்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் சித்தி இட்னானி நடிக்கும் முதல் படம் ‘வெந்து தணிந்தது காடு’ என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ALSO READ  Vijay Sethupathi: ராம் சரண் நடிக்கும் RC 16 சூப்பர் டூப்பர் ஹிட் படமாக உருவாகவுள்ளது - விஜய் சேதுபதி

Leave a Reply