Home Cinema News GOAT: தளபதி விஜய்யின் ‘GOAT’ படத்தில் ஸ்ருதி ஹாசன் பாடிய மூன்றாவது சிங்கிள் இந்த நேரத்தில்...

GOAT: தளபதி விஜய்யின் ‘GOAT’ படத்தில் ஸ்ருதி ஹாசன் பாடிய மூன்றாவது சிங்கிள் இந்த நேரத்தில் வெளியாகும்

193
0

GOAT: தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் அளவில் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு சிலிர்க்க வைக்கும் ஆச்சர்யங்களுடன் இப்படத்தை உருவாக்கி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இந்த அறிவியல் புனைகதை ஆக்‌ஷன் படத்தில் ஸ்ருதி ஹாசன் இணைகிறார் என்பது சமீபத்திய செய்தி.

ALSO READ  Ayalaan 2: அயலான் படத்தின் தொடர்ச்சி பற்றி சிவகார்த்திகேயன் பதில்

உற்சாகத்தை கூட்டடும் வகையில் ஸ்ருதி ஹாசன் ‘GOAT’ படத்தில் ஒரு பாடலுக்கு குரல் கொடுத்துள்ளார். இந்தப் பாடலை ஆகஸ்ட் முதல் வாரத்தில் மூன்றாவது பாடலாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த பாடலில் த்ரிஷா சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி உறுதி செய்யப்படாத நிலையில் உள்ளது. ஆனால் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ALSO READ  Kollywood: புதிய படத்தில் இணையும் வெற்றிமாறன் மற்றும் ராகவா லாரன்ஸ்

GOAT: தளபதி விஜய்யின் 'GOAT' படத்தில் ஸ்ருதி ஹாசன் பாடிய மூன்றாவது சிங்கிள் இந்த நேரத்தில் வெளியாகும்

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, யுகேந்திரன், ஜெயராம், பிரேம்கி, வைபவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள ‘கோட்’ படத்திற்கு சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவும், வெங்கட் ராஜன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Leave a Reply