Home Cinema News Thalaivar 171: லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர் 171’ படத்தில் நடிக்க நிராகரித்த ஷாருக்கான்

Thalaivar 171: லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர் 171’ படத்தில் நடிக்க நிராகரித்த ஷாருக்கான்

63
0

Thalaivar 171: கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் படம் ‘தலைவர் 171’. இந்த படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆக்‌ஷன் படங்களில் ஒன்றாக இது இருக்கும் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகருமான சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை நாம் பல செய்திகளில் படித்தோம். இதை மிகப்பெரிய மல்டிஸ்டார் படமாக உருவாக்க இன்னும் பல முக்கிய நட்சத்திரங்களுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ‘தலைவர் 171’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் நிராகரித்துவிட்டார் என்பது பரபரப்பான செய்தி.

ALSO READ  Kollywood: 'விடைஅமுயற்சி'யில் அஜீத் ரசிகர்களுக்கு அற்புதமான இரட்டை விருந்த

Thalaivar 171: லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தலைவர் 171' படத்தில் நடிக்க நிராகரித்த ஷாருக்கான்

லோகேஷ் கனகராஜ், தலைவர் 171 இல் ஒரு கேமியோ ரோலில் நடிக்க கிங் கானை அணுகினார். அதற்கு SRK, “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது, அனால் இப்போது கேமியோ வேடங்களில் நடிக்க விரும்பவில்லை”, மேலும் லோகேஷ் கனகராஜுடன் தனிப் படத்தில் நடிக்க ஷாருக் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தில் தற்போது வைரலாகி வருகிறது.

ALSO READ  Captain Miller: தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரம் வெளியாகியுள்ளது

Thalaivar 171: லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தலைவர் 171' படத்தில் நடிக்க நிராகரித்த ஷாருக்கான்

இருப்பினும் ‘தலைவர் 171’ தயாரிப்பாளர்கள் இப்போது அதே வேடத்தில் நடிக்க ரன்வீர் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ரன்வீர் சிங் ஆர்வமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் வரை நாம் காத்திருக்க வேண்டும். மேலும் இந்த படத்திற்கு மம்முட்டி, பிருத்விராஜ், ராகவா லாரன்ஸ், அருண் விஜய் என பெரிய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply